தமிழர்களே இந்தியாவின் நம்பிக்கைக்குரியவர்கள்  -சி. வி. விக்னேஸ்வரன் கருத்து 

/files/detail1.png

தமிழர்களே இந்தியாவின் நம்பிக்கைக்குரியவர்கள்  -சி. வி. விக்னேஸ்வரன் கருத்து 

  • 0
  • 0

 

இலங்கைத் தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நேச அணியாக இருப்பதுடன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணபடுகின்றனர் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்  சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டு அரசியல், சமூக, கலாசார ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் இலங்கையில் தமிழ்  மக்களின் சுய பாதுகாப்பு போராட்டம் மற்றும் எமது நியாயமான கோரிக்கை என்பவற்றுக்கு ஆதரவழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பாதுகாப்பதற்கான  பொறுப்பு, கோட்பாடு 2005ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதிலும் 2009ம் ஆண்டு சர்வதேச நாடுகள் இலங்கையில் தமிழ்  மக்களுக்கு  எதிரான இனப்படுகொலை நடைபெறுவதற்கு இடமளித்திருந்தன என குற்றம் சுமத்திய அவர்,இறுதி போரின் போது இன சுத்திகரிப்பு நடைமுறைப்படுத்த பட்டத்துடன் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் .
 

Leave Comments

Comments (0)