அரச படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்

/files/detail1.png

அரச படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்

  • 0
  • 0

 

இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள கிளிநொச்சியில் பொது நூலகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் என்பனவற்றை நீண்ட காலமாக அரச படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே படையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் வாரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் அரச படையினரால் ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களின் பெருமளவான காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது. பொது மக்களின் பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. அனால் இன்னமும் வடக்கில் மக்கள் தமது சொந்த நாட்டிலையே 16 இடைத்தங்கல் முகாம்களில் பல இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். கேப்பாப்புலவில் ஒரு வருடத்திற்கு மேலாக மக்கள் தமது வாழ்விடங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் கிளிநொச்சியில் பொது நூலகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை வரும் 4ம் திகதி நடத்த உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)