சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

/files/detail1.png

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

  • 0
  • 0

நாளை (செப்டம்பர் 10) சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி கோவையில் கேரள அரசின் பேருந்தை மறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சிறுவாணி அணையின் நீர்மட்ட உயரத்தினை 50 அடிக்கு தேக்காமல் 42 அடியிலேயே கேரள அரசு வெளியேற்றி வருகிறது. இதனால் அணை நிரம்பாமல் கேரள அரசு தடுத்து வருகிறது. இதன் காரணமாகக் கோவையில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

இயற்கையாக மழை பெய்து தண்ணீர் வந்தாலும் கேரள அரசு அதைக் கோவை மக்களுக்குக் கிடைக்கச் செய்யாமல் வீணாக்குகிறது. சிறுவாணி அணை பராமரிப்புக்கென ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பணத்தைக் கோவை மாநகராட்சி செலவிடுகிறது. ஆனால் கேரள அரசு திட்டமிட்டு தமிழர்களை வஞ்சிக்கிறது. கேரள அரசு சிறுவாணி அணையில் 50 அடிக்குத் தண்ணீரைத் தேக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவைக்கு வரும் கேரள அரசின் பேருந்துகளை மறித்து மறியல் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து வரும் 10-9-19 மாலை 4 மணிக்குக் கோவை திருவள்ளுவர் நிலையம் முன்பு நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது.

Leave Comments

Comments (0)