கொழுப்பெனும் நண்பன் 7

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 7

  • 2
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

நமது தற்போதைய உணவு முறை முழுவதும் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸ் அடங்கியது. அதில் இருந்து பேலியோ எனும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறும் முன் , நமது முக்கியமான உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல் போன்றவை எப்படி வேலை செய்கின்றன? என்றும் நமது உடலில் கொழுப்பின் அளவு , ரத்தத்தின் குறியீடுகள் , ரத்த சர்க்கரை அளவு போன்றவற்றை எடுத்து பார்க்க வேண்டும். பெரும்பாலான சமயம் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றே நாம் எண்ணிக்கொண்டிருப்போம் . ஆனால் நம் உடலில் நீரிழிவு ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும். பலருக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய ரத்த பரிசோதனை எடுக்கும் போது  தான் தங்களுக்கு நீரிழிவு இருப்பதையே அறிந்து கொள்வர்.

ரத்தப்பரிசோதனைகளை பொறுத்தமட்டில் எனது அறிவுரை யாதெனில் வருடம் ஒரு முறையேனும் உங்கள் முக்கிய உறுப்புகளுக்கான பின்வரும் ரத்த பரிசோதனைகளை செய்து பார்ப்பது நல்லது. நீரிழிவைக் கண்டறிய Hba1c எனும் பரிசோதனை , சிறுநீரகத்தின் செயல் திறன் அறிய Urea, creatinine, uric acid போன்ற பரிசோதனைகள் உதவும். நீரிழிவு இருப்பவர்கள் இத்தோடு சேர்த்து சிறுநீரில் நுண்புரதம் வெளியேறுவதை கண்டறியும் urinary microalbumins என்ற பரிசோதனையை செய்வது நல்லது. கல்லீரலின் செயல்பாட்டை கண்டறிய Liver function test. உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அறிய lipid profile உதவும். இந்த பரிசோதனைகள் மூலம் உங்களது தற்போதைய உடல் உபாதைகள் அறியப்பட்டு அதற்கேற்றாற் போல் உணவு முறை தரப்படும். முகநூலில் இந்த உணவு முறையை இலவசமாக பரிந்துரைத்து வரும் "ஆரோக்கியம் & நல்வாழ்வு" எனும் குழுமம் வெகு சிறப்பாக இயங்கி வருகிறது. திரு. நியாண்டர் செல்வன் எனும் அமெரிக்கா வாழ் தமிழரால் இந்த உணவு முறை முயற்சி செய்யப்பட்டு தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் உயர்ந்த நோக்குடன் தொடங்கப்பட்டது இக்குழுமம். இன்று சுமார் ஐந்தரை லட்சம் மக்கள் இந்த குழுமத்தில் பயனாளிகளாய் இருந்து சாட்சி பகர்கின்றனர். தங்களது ரத்த பரிசோதனை முடிவுகளை இந்த குழுமத்தில் பதிவு செய்தால் உங்களுக்கு இலவசமாக உணவு பரிந்துரை கிடைக்கும். பேலியோ உணவு முறை என்பது ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து குதித்த டயட் அல்ல. இதுவரை தாங்கள் உண்ணாதவற்றை உண்ணச்சொல்லும் உணவு முறையும் அல்ல.  உங்கள் வீட்டிலும் உங்களை சுற்றியுள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டே இந்த உணவு முறையை கடைபிடிக்கலாம். இந்த உணவு முறையில் மாவுச்சத்தை குறைத்து கொழுப்புணவை எடுப்பதால் இதை குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை என்றும் அழைப்போம். ஆங்கிலத்தில் " Low carb high fat " உணவு முறை என்று அழைக்கப்படுகிறது

பேலியோ உணவு முறையில் அரிசி கோதுமை போன்ற தானியங்களுக்கு இடம் இல்லை. காரணம் பெரியது இல்லை. இவையனைத்திலும் மாவுச்சத்து நிறைந்து உள்ளதே காரணம். எந்த ரூபத்திலும் இனிப்பு உள்ளே வரக்கூடாது. அது சீனியாக இருப்பினும் சரியே. நாட்டு சர்க்கரை , பனவெல்லம் அனைத்துக்கும் ஒரே சட்டம் தான். இவையனைத்திலும் சுக்ரோஸ் எனும் மாவுச்சத்து நிறைந்து உள்ளதே காரணம். இந்த உணவு முறையில்  பழங்களுக்கு தடை உள்ளது. காரணம் அவற்றுள் கெட்ட சர்க்கரையான "ஃப்ரக்டோஸ்" நிறைந்து காணப்படுவது தான். இந்த ஃபரக்டோஸ் உள்ளே சென்று நேரே நமது கல்லீரலை உண்டு இல்லை என்று செய்து நமது ரத்தத்தில் கெட்ட கொழுப்பான ட்ரைகிளசரைட் அளவுகளை கூட்டிவிடுகின்றன.எண்ணெயில் பொறித்த பண்டஙகள், மைதாவில் செய்த உணவுகள் , குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள் போன்றவற்றை பற்றிக் கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இவை அனைத்தையும் கனவிலும் நினைக்கக் கூடாது. இவையனைத்தையும் நிறுத்தி விட்டு எதைத்தான் சாப்பிடச்சொல்கிறீர்கள்?பேலியோவில் அனுமதிக்கப்பட்ட உணவுகளை பற்றி அறிய ஒரு வாரம் காத்திருங்கள்

 

முந்தய தொடரினை படிக்க

\r\n

Leave Comments

Comments (0)