கொழுப்பெனும் நண்பன் 10

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 10

  • 2
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

பேலியோ உணவு முறை மூலம் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க விரும்பும் மக்கள் முதலில் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும். அந்த ரத்தப்பரிசோதனையில் அடிப்படை பரிசோதனைகளான Hba1c (மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு) , சிறுநீரக செயல்பாட்டு திறன் ( யூரியா , க்ரியாடினின்), கல்லீரல் செயல்பாட்டு திறன் , கொழுப்பு அளவுகள் , தைராய்டு சுரப்பி செயல்பாடு, ஹீமோகுளோபின், சிறுநீரில் புரதம் வெளியாகும் தன்மை  போன்றவற்றை பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பரிசோதனையை முகநூலில் இந்த உணவு முறையை இலவசமாக சேவையாக வழங்கி வரும் "ஆரோக்கியம் & நல்வாழ்வு" எனும் குழுமத்தில் பதிய வேண்டும். குழுமத்தில் உள்ள முன்னோர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு முறை பரிந்துரைக்கப்படும். இந்த சேவையை கடந்த ஐந்து வருடங்களாக இலவசமாக இந்த குழுமம் வழங்கி வருகிறது. தற்போது சுமார் ஐந்தரை லட்சம் பயனாளிகள் இருக்கும் இக்குழுமத்தை அமெரிக்கா வாழ் தமிழர் திரு. நியாண்டர் செல்வன் அவர்கள் தோற்றுவித்தார். தூய சேவை ஒன்றே நோக்கமென இந்த குழுமம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு உணவு முறை பரிந்துரை பெற்றவர்கள் வேறு எந்த உணவையும் உண்ணாமல் , பரிந்துரையில் கூறியவற்றை செவ்வனே கடைபிடித்து மூன்று மாத முடிவில் மீண்டும் ரத்த பரிசோதனை செய்து அதே குழுமத்தில் பதிந்தால் இலவசமாக மறு பரிந்துரை கிடைக்கும். முகநூல் மூலம் பலரும் நேரத்தை விரயம் செய்யும் சூழலில் முகநூலைக்கொண்டு மாபெரும் உணவுப்புரட்சியை ஏற்படுத்தி வருகிறது இக்குழுமம். இந்த குழுமத்தில் முன்னோர்கள் மற்றும் மருத்துவர்கள் எழுதிய பல்வேறு மருத்துவ கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. முகநூல் வாசகர்கள் நிச்சயம் ஒரு முறை அந்த குழுமத்தில் சென்று கண்டால் நிச்சயம் பேலியோவுக்குள் நுழைவார்கள். ஏனெனில் அனுதினமும் பேலியோவினால் பயனடைந்த பலரும் தங்களின் புகைப்படத்துடனும் ரத்தப்பரிசோதனை முடிவுகளில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களையும் ஆதாரங்களாய் போட்டு வருகின்றனர். பேலியோவின் அடிப்படை விசயங்களை அறிந்து கொள்ள இந்த குழுமம் ஒரு அட்சய பாத்திரமாகும்.

பேலியோ உணவு முறையில் காலை உணவாக கால் லிட்டர் பாலில் 30 கிராம் வெண்ணெய் கலந்து பருக வேண்டும் அல்லது பாதாம் பருப்புகள் 80 முதல் 100 என்றளவில் உண்ண வேண்டும்  . பாதாமை பனிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து உண்ண வேண்டும்.

பாதாமில் உள்ள ஃபைட்டிக் ஆசிட் எனும் தேவையற்ற பொருளை நீக்கவே பனிரெண்டு மணிநேரம் பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கிறோம். இந்த ஃபைட்டிக் அமிலமானது நமது உணவில் உள்ள மற்ற நல்ல சத்துக்களை உடலை கிரகிக்க விடாமல் செய்து விடும். மதிய உணவாக குறைந்த மாவுச்சத்துள்ள அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிரம்பிய காய்கறிகளான முட்டை கோஸ் , காலி பிளவர் , கீரை வகைகள், புடலங்காய், பாகற்காய், வெண்டைக்காய், கத்திரிகாய் போன்றவற்றை உண்ணலாம். கூட நான்கு முட்டைகள் வரை எடுக்கலாம். முட்டைகளில் தரமான புரதம் உள்ளது. அது என்ன தரமான புரதம் ? முட்டையில் உள்ள புரதமானது நூற்றுக்கு நூறு சதவிகிதம் நமது உடலால் கிரகித்துக்கொள்ளக் கூடியது. மேலும் முட்டையில் நல்ல கொழுப்பும், விட்டமின் ஏ  , சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற நுண்சத்துகளும் அடங்கியுள்ளன. முட்டையை தங்களின் விருப்பம் போல் உண்ணலாம். இரவு உணவாக 250 முதல் 300 கிராம் கறி ( கோழி / மட்டன் ) உண்ணலாம். சைவ உணவு உண்பவர்கள் 200 கிராம் பனீர் உண்ணலாம். 
இந்த உணவு முறையை மூன்று மாதங்கள் தொடர வேண்டும். தாங்கள் நீரிழிவிற்கு பார்க்கும் மருத்துவரிடம் காட்டி நீரிழிவிற்கான மாத்திரைகளை குறைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் குறை மாவு உணவில் நாம் முன்னர் சாப்பிட்ட அதே அளவு மாத்திரை தேவைப்படாது. மேலும் பிரதி மாதம் சிறிது சிறிதாக மாத்திரைகளின் அளவை குறைத்து பலருக்கும் மாத்திரைகள் இல்லாமல் உணவு மூலம் மட்டுமே நீரிழிவு கட்டுக்குள் இருக்கக்காணலாம். இந்த பலனை பேலியோ உணவு முறையில் இருக்குமட்டுமே அனுபவிக்க இயலும்.

ஆசை தூண்டுதலால் மீண்டும் பழைய மாவுச்சத்து நிரம்பிய உணவு முறைக்கு சென்றால் மீண்டும் நீரிழிவு நோய் வந்துவிடும். ஆகவே பேலியோ உணவு முறையை குறைந்த நாட்களுக்கு கடைபிடித்து பின்பு விடுவதை விட வாழ்க்கை முழுவதும் தொடரும் ஒரு வாழ்வியல் மாற்றமாக ஏற்பது நல்லது

பேலியோ உணவு முறைக்கு வந்த பலரும் தாங்கள் அதுவரை போட்டு வந்த இன்சுலின் ஊசியை நிறுத்தி மாத்திரைகள் போடும் நிலைக்கு வந்துள்ளனர். மாத்திரைகள் போட்டு வந்த பலரும் குறைந்த அளவிலான மாத்திரைகளுக்கு மாற்றம் கண்டுள்ளனர். இந்தக் கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு நீரிழிவு நோயாளிக்கும் நான் விடுக்கும் அறைக்கூவல் யாதெனில் தாங்கள் மூன்று மாதம் இந்த உணவு முறைக்கு மாற்றம் செய்து பாருங்கள். முதலில் எடுக்க வேண்டிய ரத்த பரிசோதனைகளை சரியாக எடுங்கள். ஆரோக்கியம் & நல்வாழ்வு முகநூல் குழுமத்தில் பதிவிடுங்கள். உங்களுக்கான டயட் சார்ட் உங்களை வந்தடையும். அதை கண்டிப்புடன் மூன்று மாதம் தொடருங்கள். விளைவுகளை மறு பரிசோதனை மூன்று மாதம் கழித்து செய்து பாருங்கள். நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்.

கட்டாயம் தாங்களாகவே இந்த உணவு முறைக்கு வழிகாட்டுதல் இன்றி முயற்சிப்பது தவறு. ஏனெனில் நீரிழிவு நோய் உள்ள பலருக்கும் வெளியே தெரியாத அளவு பல பிரச்சனைகள் உள்ளுறுப்புகளில் இருக்கும். அதில் முக்கியமான ஒன்று. ஆரம்ப கட்ட சிறுநீரக செயல்பாட்டுக்குறைவு. உங்கள் சிறுநீரகம் எவ்வாறு ரத்தத்தை சுத்தீகரிக்கிறது என்பதை ரத்தத்தில் உள்ள யூரியா க்ரியாடினின் போன்ற கழிவுப்பொருட்களின் அளவை அளந்து கூற முடியும். ஆனால் பல நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அளவுகள் இரண்டும் சரியாகவே இருக்கும். ஆனால் ஆரம்ப கட்ட சிறுநீரக செயல்பாட்டுகுறைவு ஆரம்பித்திருக்கும். அதை எப்படி கண்டறிவது? உங்கள் சிறுநீரகம் ஒரு போதும் சிறுநீர் வழி புரதத்தை வெளியேற்றக்கூடாது. அவ்வாறு வெளியேற்றுவதை ப்ரோட்டினூரியா என்போம். இந்த ப்ரோடினூரியா என்பது முற்றிய சிறுநீரக செயல்பாட்டு குறைவில் வருவது. சிறுநீரே வெள்ளை நிறத்தில் போகும் அளவுக்கு பலருக்கும் இந்த பிரச்சனை வந்திருக்கும். ஆனால் ஆரம்ப கட்டத்தில் சிறுநீரின் நிறத்தை கொண்டு இதை கண்டுபிடிப்பது இயலாது. அதற்குத்தான் நமது சிறுநீரில் மைக்ரோ ஆல்புமின் என்ற அளவுகளை பார்க்க வேண்டும். கட்டுப்பாடற்ற நீரிழிவினால் நமது சிறுநீரகம் பழுதாக தொடங்கி விட்டதை இந்த மைக்ரோ ஆல்புமின்கள் உணர்த்தும். இதில் நல்ல விசயம் என்னவென்றால் ஆரம்ப கட்ட சிறுநீரக செயல்பாட்டுக்குறைவை நாம் கண்டறிந்தால் அதை நம்மால் முழுவதுமாக குணப்படுத்த இயலும்.  ஆனால் நம்மில் பலரும் சிறுநீரக பிரச்சனை முற்றிய பின்பே மருத்துவரை சந்திக்கிறோம். ஒருவரது ரத்தத்தில் க்ரியாடினின் அளவுகள் கூடுவதற்கான காரணங்கள் பல. கிருமித்தொற்று, சிறுநீர்ப்பாதையில் கல் போன்றவற்றால் கூடும். மிக முக்கிய காரணம் யாதெனில் சிறுநீரகங்கள் செயலிழக்கின்றன என்பதையே காட்டும். ஆகவே, உங்கள் சிறுநீரகங்கள் முதலில் எப்படி இருக்கின்றன என்று பார்க்க வேண்டும்.

ரத்ததில் மட்டுமே நாம் கவனிக்க இத்தனை பரிசோதனைகள் இருக்க பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள்  காலை வெறும் வயிற்றில் மற்றும் சாப்பிட்ட இரண்டு மணிநேரம் கழித்த சர்க்கரை அளவுகள் மட்டுமே பார்க்கின்றனர். நமக்கு தடைக்கற்களாக இருப்பது பொருளாதாரம் தான். இருப்பினும்  குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை HbA1c பரிசோதனை செய்தாக வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். வருடம் ஒரு முறையேனும் கண் பரிசோதனை, இதய பரிசோதனை  செய்து கொள்ள வேண்டும். இவற்றை ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் ஒரு ஃபைல் போட்டு பாதுகாக்க வேண்டும்.  கடந்த இரண்டு வருடங்களாக நீரிழிவு நோயாளிகள் பல்லாயிரம் பேருக்கு பேலியோ உணவு முறையை ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமம் பரிந்துரை செய்துள்ளது . நல்ல முறையில் கடைபிடித்தவர்களுக்கு நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது . எனவே முதலில் ரத்தம் மற்றும் உடல் பரிசோதனைகளை செய்யுங்கள். குழுமத்தில் பதியுங்கள். பேலியோவை கடைபிடியுங்கள். நீரிழிவை வெல்லுங்கள். 
அடுத்த பகுதியில் உடல் பருமனை குறைக்கும் பேலியோ குறித்து  காண்போம்.

Leave Comments

Comments (0)