கொழுப்பெனும் நண்பன் 6

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 6

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

கீடோசிஸின் நன்மைகள் பற்றி சென்ற பகுதியில் கண்டோம். இந்த பகுதியில் நம் உடலை கீடோசிஸ் எனும் கொழுப்பை எரிக்கும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பதை காண்போம்.

நம் தற்போதைய உணவு அட்டவணையில் சுமார் 80 சதவிகிதத்தை மாவுச்சத்து ஆக்கரமித்துள்ளது. அந்த 80 சதவிகிதத்தை கொழுப்பை கொண்டு ஈடுசெய்துவிட்டு நமது மாவுச்சத்தின் உட்கொள்ளும் அளவை 5 சதவிகிதத்திற்கும் கீழ் உண்ண வேண்டும். கிராம் கணக்கில் நமது தினசரி உணவில் 40 கிராம் அளவுக்கு கீழ் மாவுச்சத்தை உண்டால் நம் உடல் கொழுப்பை எரிக்கும் நிலைக்கு செல்கிறது.  இது தான் கொழுப்பை கொழுப்பால் எரிக்கும் நிலையாகும். 
\r\nஇந்த உணவு முறையை பேலியோ உணவு முறை என்று கூறுகிறோம். பேலியோ என்றால் "பழைய" என்று பொருள். அதாவது கற்காலத்தில் மனிதன் உட்கொண்ட உணவு முறையாகும். ஆதி மனிதன் அவனது உணவில் நாம் தினமும் உண்ணும் அளவு மாவுச்சத்தை உண்ணவில்லை. அவன் உண்டது நல்ல கொழுப்புள்ள உணவை மட்டும் தான்.

அக்காலத்தில் நாம் உண்பதை போல் தானியங்கள் உண்ணும் உணவு முறை இருக்கவில்லை. வேட்டையாடி உண்ணும் முறை தான் இருந்தது. பகல் முழுவதும் குழுவாக வேட்டையாடி  கிடைத்த மிருகத்தை இரவு ஒருவேளை உணவாக உண்டு வாழ்ந்தனர். தற்போது உள்ள விவசாயம் தோன்றி பத்தாயிரம் வருடங்கள் மட்டுமே ஆகின்றன. உலகில் மனிதன் தோன்றிய இரண்டரை லட்சம் வருடங்களில் கடந்த பத்தாயிரம் வருடங்கள் மட்டும் தான் விவசாயம் இருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இது தான் உண்மை. ஆகவே நாம் உண்ணும் அரிசி , கோதுமை , பயறு , பருப்பு போன்ற உணவுகள் தோன்றி பத்தாயிரம் வருடங்கள் மட்டுமே ஆகின்றன. 

நம் மரபணுக்களுக்கு இரண்டரை லட்சம் வருடங்களாக பழகிப்போன உணவு முறை தினமும் ஒருவேளை உண்ணும் மாமிச உணவாகும்.  

நாம் இன்று மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவு முறையில் இருக்கிறோம்.அதற்குரிய உழைப்பையும் செலவிடுவதில்லை. ஆனால் கற்கால நமது மூதாதையர் ஒரு வேளை உண்ணவே ஒரு நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருந்தது. மாமிசம் என்பது முழுக்க முழுக்க கொழுப்பும் புரதமும் தான். இதன் மூலம் நம் ஆதிகால முன்னோர்கள் உண்ட உணவு முறை கொழுப்பை அதிமாக உண்டு மாவுச்சத்தை குறைத்து உண்ணும் உணவு முறையாகும். இந்த உணவு முறையை தான் "பேலியோ" எனப்படுவதாகும்.பேலியோ உணவு முறையில் தானியங்கள் , பயறு மற்றும் பருப்பு வகைகளை தவிர்த்து 
\r\nமுட்டைகள், மாமிசம் , கீரை காய்கறிகள் போன்றவற்றை உண்ண வேண்டும். இந்த உணவு முறை மூலம் உங்கள் உடலை க்ளூகோசை எரித்து சக்தியை பெறும் நிலையில் இருந்து கொழுப்பை எரித்து சக்தியை பெறும் நிலைக்கு மாற்றலாம். கொழுப்பை எரித்தால் நமக்கு கிடைப்பது ஃபேட்டி ஆசிடுகள் எனும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கீடோன்களாகும். இந்த கீடோன்கள் நமது மூளையின் செல்களுக்கு நுழைந்து ஆற்றல் தரும் வலிமை கொண்டது.க்ளூகோசில் இயங்கும் மூளையின் செயல்திறனை விட  கீடோன்களால் இயங்கும் மூளை இருமடங்கு இருமடங்கு  செயல்திறனோடு விளங்கும். 


\r\nக்ளூகோசை நம்பி இருக்கும் உடலானது ரத்தத்தில் க்ளூகோஸ் அதிகமாக இருக்கும் போது தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் அதுவே ரத்தத்தில் குறைகையில் சோர்வு , படபடப்பு வந்து மயக்கம் ஏற்படுகிறது. இதுவே கீடோன்களை கொண்டு மூளை இயங்கும் போது தொடர்ந்து சுறுசுறுப்பாக உணரும். சோர்வு மற்றும் படபடப்பு தவிர்க்கப்படும். 


\r\nநீரிழிவு , ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்களுக்கு இந்த உணவு முறை சிறந்த மருந்தாக அமைகிறது. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் எனும்  வள்ளுவரின் வாக்கிற்கிணங்க  ஒரு நோய் உருவானால் அந்த நோயின் காரணத்தை சரி செய்தால் மட்டுமே அந்த நோயை சரி செய்ய இயலும். அது போலவே நமக்கு வரும் அனைத்து வாழ்வியல் நோய்களான உடல் பருமன் , ரத்த அழுத்தம் , நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு நமது உணவு முறையே காரணம் என்பதை உணர வேண்டும். பேலியோ உணவு முறையில் நுழைவது எப்படி? அடுத்த பகுதியில் காண்போம்

முந்தைய தொடரினை படிக்க 

\r\n

Leave Comments

Comments (0)