கொழுப்பெனும் நண்பன் 4

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 4

  • 1
  • 0

 

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

இந்த நூற்றாண்டின் அமைதியான அதே சமயம் கொடுமையான விளைவுகளை உருவாக்கும் நோய்களில் தலையாயது நீரிழிவு எனும் டயாபடிஸ் ஆகும். தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் நீரிழிவு நோயாளிகள் வாழ்கின்றனர். இந்திய அளவில் இது 11 கோடியாகும் . அகில உலக அளவில் நீரிழிவின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது. நீரிழிவால் இதய நோய் , சிறுநீரக நோய் வரும் மக்களை கொண்ட மாநிலங்களுள் தமிழகத்திற்கு முதலிடம். இவையெல்லாம் சொல்வதை என்ன? இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு பெரிதாக இல்லாத ஒரு நோய் தற்போது இளைய சமுதாயத்தினரையும் தாக்குகிறது என்றால் நம்மிடையே புகுந்த உணவு முறை மாற்றம் தான் முதல் காரணமாக இருக்க முடியும். நீரிழிவிற்கான அடிப்படை காரணம் - மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்டை அதிகம் சார்ந்துள்ள நமது உணவு முறை. காலையில் இட்லி தோசை , மதியம் சாதம் இரவு தோசை, சப்பாத்தி என்று ஒரு நாளைக்கு முந்நூறு முதல் நானூறு கிராம் மாவுச்சத்தை நாம் உண்டு வருகிறோம். இந்த மாவுச்சத்தானது ரத்தத்தில் கலந்தவுடன் க்ளூகோசாக மாற்றம் அடைகிறது. இந்த க்ளூகோசை எரித்து நமது செல்கள் இயங்கத் தேவையான சக்தியை பெறுகின்றன. இதற்கு உதவும் ஹார்மோன் தான் "இன்சுலின்". 


\r\nஆக, ஒருவர் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது அவருக்கு அதிக இன்சுலின் சுரக்கிறது. சிறுவயதில்  இருந்தே இப்படி மாவுச்சத்தை முழுப்போடு போட்டு வளரும் ஒருவருக்கு காலம் செல்லச்செல்ல இந்த இன்சுலின் உற்பத்தியில் கோளாறு ஏற்படுகிறது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்வதில்லை. இந்த நிலையை "இன்சுலின் எதிர்ப்பு நிலை" (INSULIN RESISTANCE) என்கிறோம். 


\r\nஇத்தகைய நிலையை அடைய முப்பது முதல் நாற்பது வயது ஆகிறது. இந்த வயது வரம்பு தற்போது 20 முதல் 30 என குறைந்து கொண்டு வருவதை கணக்கில் கொள்ள வேண்டும். 


\r\nஇன்சுலினின் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறால் தான் உண்ணும் மாவுச்சத்தின் அளவிற்கு இன்சுலின் சுரக்காமலோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் வேலை செய்யாமல் போவதாலோ ஒருவர் நீரிழிவு நோயாளி ஆகிறார். அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார். சிலர் தாங்கள் நீரிழிவு என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட போது ஒரு மாத்திரை எனும் அளவில் இருந்து பிறகு வருடங்கள் செல்லச்செல்ல மாத்திரைகளின் அளவுகள் கூடிக்கொண்டே சென்று கடைசியில் இன்சுலின் ஊசி போடும் அளவு வந்து நிற்பதை காணலாம். இதற்கு காரணம் என்ன? ஒரு நோய் வந்தால் அந்த நோயின் அடிப்படை காரணத்தை தெரிந்து அதை சரி செய்ய வேண்டும். அதை விடுத்து அதற்கு மருத்துவம் பார்ப்பது பயன் அற்றது. நீரிழிவு விசயத்திலும் நடப்பது அது தான். ஒருவருக்கு ஏன் நீரிழிவு வந்தது? மாவுச்சத்தை வரம்பு மீறி உண்டதால் நீரிழிவு வந்தது. ஆக, நீரிழிவில் இருந்து ஒருவர் குணமாக அவர் தினமும் உண்ணும் மாவுச்சத்தை அளவில் குறைத்து உண்பதே அறிவுப்பூர்வமான சிறந்த மற்றும் எளிய வழி ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நம்மால் நம் வாயை கட்ட முடியாது. ஆகவே நன்றாக சோறு, இட்லி , தோசை என ஃபுல் கட்டு கட்டிவிட்டு அதில் இருந்து தப்பித்து கொள்ள மாத்திரைகளையோ இன்சுலினையோ போட்டுக்கொள்கிறோம். இது தவறான அணுகுமுறை. 


\r\nஒருவருக்கு நீரிழிவு இருப்பது கண்டறியப்பட்டால் அவர் தினமும் மூன்று வேளையும் தாணியங்கள் சார்ந்த உணவு முறையை முதலில் நிறுத்த வேண்டும். தானியங்கள் அனைத்திலும் அளவு கடந்த மாவுச்சத்து அடங்கியுள்ளது. சிலர் கேட்கலாம். அரிசிக்கு பதில் நான் கோதுமையில் செய்த சப்பாத்தி சாப்பிடுகிறேன். சிலர் தான் கேப்பை தோசை மற்றும் நவதானியங்கள் சாப்பிடுவதாகவும் கூறுகின்றனர். ஆனால் இவையனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது மாவுச்சத்து தான். சரி.. நீரிழிவை கட்டுக்குள் கொண்டு வர மாவுச்சத்தை குறைக்க சொல்கிறீர்கள்.எந்த  அளவு குறைக்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. தினமும் தற்போது 400 கிராம் என உண்டு வரும் மாவுச்சத்தின் அளவை 40 கிராம் என்ற அளவில் குறைத்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும் அதிசயத்தை கண்கூடாக பார்க்கலாம். மாவுச்சத்தை குறைத்து விட்டு அதற்கு பதிலாக எதை உண்பது? நல்ல ஆரோக்கியமான கொழுப்புணவை மாவுச்சத்துக்கு பதில் நாம் உணவாக எடுக்கலாம். கொழுப்பை எடுக்கும் போது அவை நமக்கு ஃபேட்டி ஆசிட்டுகளையும் கீடோன்களையும் தருகின்றன. இவற்றால் இன்சுலின் சுரப்பது வெகுவாக கட்டுக்குள் வருகிறது. குறைவாக சுரக்கப்பட்ட இன்சுலின் நிறைவாக வேலை செய்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் எப்போதும் ஒரே அளவில் இருக்கிறது. மாவுச்சத்தை அதிகமாக உண்ணும் மக்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை தறிகெட்டு இருக்கும். காலை குறைவாக இருக்கும். மாலை மிக அதிகமாக இருக்கும். கொழுப்புணவை உண்டு மாவுச்சத்தை குறைத்த மக்களுக்கு அந்த சராசரி சர்க்கரை அளவுகள் எப்போதும் சரியாக ரத்தத்தில் ஏறாமல் இறங்காமல் இருக்கும். இப்போது அங்கள் மனதில் ஒரு ஐயம் எழும். நமது மூளை மற்றும் உடல் செல்கள் செயல்பட க்ளூகோஸ் கட்டாயத்தேவை என்று படித்திருக்கிறேன்.நீங்க என்னடான்னா மாவுச்சத்த குறைக்க சொல்றீங்க. க்ளூகோஸ் இல்லாம உடம்பு எப்படி வேலை செய்யும்? மூளைக்கு எனர்ஜி எங்க இருந்து கிடைக்கும்? அதற்கான விடையறிய அடுத்த பகுதி வரை காத்திருங்கள் 

முந்தய தொடரினை படிக்க : http://karuppu.thamizhstudio.com/news/good-fat-part-3

\r\n

Leave Comments

Comments (0)