இரு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்- மைத்திரிபால சிறிசேனா

/files/detail1.png

இரு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்- மைத்திரிபால சிறிசேனா

  • 0
  • 0

எத்தகைய தடைகள் வந்தாலும் இலங்கையில் இரு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து இலங்கை ஜனாதிபதி மேலும் கூறுகையில், “மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு கடும் எதிர்ப்புக்கள் வந்துள்ளன. மனித உரிமை என்ற போர்வையில் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்றால் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆவணங்களை கடந்த ஒன்றரை வருடங்களாக கோரி வருகின்ற போதிலும் அதனை வழங்குவதில் தாமதம் நிலவுகின்றது.

மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் சரியான ஆவணங்கள் கடந்த ஜனவரிமாத விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் பரஜை ஒருவருக்கு மட்டுமே மரணதண்டனை நிறைவேற்ற வேண்டியுள்ளது. வெளிநாட்டவருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற நான் விரும்பவில்லை.

அடுத்த இரு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். மனித உரிமை போன்ற எந்த அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றியே தீருவேன்” என தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)