ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவு

/files/detail1.png

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவு

  • 0
  • 0

 

வரும் பெப்ரவரி,மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை சபையின் அமர்வில் மனித உரிமை விடையத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக இலங்கை அரசு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் துாதுவர் டுங்-லாய் மார்க் (Mr. Tung-Lai Margue) கருத்துக்கூறுகையில், மனித உரிமைவிடையத்தில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் செயற்பாடுங்கள் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. காணாமல்போனவர்களைக்கண்டு பிடிக்கும் வகையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டமை மிகப்பெரிய நடவடிக்கையாகும்.

அத்துடன் பல முன்னேற்பாடான செயற்பாடுகளை நான் பார்வையிடுகின்றேன். இருந்தும் இவை போதாது குறிப்பாக மக்களின் காணிகளை  அரச படையினர் அபகரித்து வைத்திருக்கின்றனர். அவை விடுவிக்கப்படும் வேகம் போதாது என்றார்.

இதேவேளை மனித உரிமை விடையம் குறித்து எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கால அவகாசம் என்பதைச் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)