இலங்கையில் சோளப் பயிர் செய்கைக்குத் தடை

/files/detail1.png

இலங்கையில் சோளப் பயிர் செய்கைக்குத் தடை

  • 4
  • 0

 

இலங்கையில் அண்மைக்காலமாக படைப்புழுத் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர்.

படைப்புழுவால் மக்காச் சோளம், இனிப்பு மக்காச் சோளம், சோளம் மற்றும் புல்வகை களைகளில் தாக்குதல் அதிகம் காணப்படும். இவற்றை தவிர, நெல், கரும்பு, பருத்தி, சிறு தானியங்கள், நிலக்கடலை, புகையிலை மற்றும் கோதுமையிலும் இதன் தாக்குதல் பரவலாகக் காணப்படும். காய்கறிப் பயிர்களை அதிகம் விரும்பாவிட்டாலும், அதிலும் இப் புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தும். பூ வகைப் பயிர்களையும், பப்பாளி, திராட்சை போன்ற பழப் பயிர்களையும் தாக்கவல்லது.

இந்நிலையில், மறு அறிவித்தல் வரும் வரையில்  சிறுபோக சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறு  விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

சோளப் பயிர் செய்கையில் மிக வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில்  பல  பகுதிகளிலுள்ள சோளப் பயிர் செய்கைகள், படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. சோளப் பயிர் தவிர்த்த, பிற பயிர்களிலும், இந்தப்புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அநேகமான பகுதிகளில் படைப்புழுவின் தாக்கம் தற்போது மிகவும் வேகமாக அதிகரித்து வருவதாக விவசாயத்துறையினர் தெரிவிக்கின்றனர்.  இதனால், சோளப் பயிர் மட்டுமின்றி, வேறு பல பயிர்களும் இந்தப் புழுவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் படைப்புழுவினால் பழச்செய்கைக்கு தாக்கம் ஏற்படவில்லை என, ஹொரணை பழச்செய்கை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியிலேயே விவசாய அமைச்சு இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதேவேளை, படைப்புழுவை ஒழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை, பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், வெற்றியளித்துள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார்.

படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

வீழ்ச்சி படைப்புழு அல்லது வரத்துப்படைபுழு, வெளிநாட்டு இராணுவப்படைப்புழு என்பது  Fall armyaworm ( Spodopterda Frugiperda)  என்பது லெபிடோப்டர் வரிசையைச் சேர்ந்த ஒரு இனம் மற்றும் வீழ்ச்சி படைப்புழு, அந்த பூச்சியின்  லார்வா என்னும்  குடம்பி வாழ்க்கை நிலை ஆகும். "படைப்புழு" என்ற சொல்லானது பல இனங்களைக் குறிப்பதாக இருக்கலாம். வீழ்ச்சிப் படைப்புழுவானது ஒரு தீங்குயிர்   ஆகும். இது பலவகையான பயிர்களைத் தாக்கி, பெருமளவிலான பொருளாதார சேதத்தை வேளாண் மக்களுக்கு ஏற்படுத்த்கூடியது. இதன் அறிவியல் பெயரானது ஃப்ரூஜ்பெர்டாடா (frugiperda) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள் இலத்தீன் மொழியில் இழந்த பழம் என்பது ஆகும், ஏனென்றால் இது பயிர்களை அழிப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave Comments

Comments (0)