எனக்கு நீ சரிசமமா ?
February 20, 2021 - selvamani T
February 26, 2021,6:43:48 PM
பிரித்தானியாவில் தொடரப்பட்ட இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறக்கோரி இலங்கை இராணுவத்தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.
2018ஆம் ஆண்டு, இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றபோது, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டது.
இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது. இது குறித்து பிரித்தானியாவுக்கு இலங்கை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெறுமாறு பிரித்தானியத் துாதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஒரு கொண்டாடப்படும் போர் வீரர் என்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறு பிரித்தானிய நீதிமன்றத்தைக் கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் பெப்ரவரி 1ம் திகதி, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு எதிரான விசாரணை பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்படும் போது, அவருக்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த விவகாரம் மோசமான ராஜதந்திரம் தொடர்பான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய துாதுவர் ஜேம்ஸ் டெளரிஸிடம், இலங்கை அதிகாரிகள் தகவல்களைப்பரிமாரியுள்ளதாக வெளிவிவகாரச்செயலர் ரவிநாத் ஆரிய சிங்க தெரிவித்துள்ளார்.
முறையாக நியமிக்கப்பட்ட ராஜதந்திரி என்ற வகையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் ராஜதந்திர விலக்குரிமையை உறுதிப்படுத்துமாறும் தாம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய துாதுவர் ஜேம்ஸ் டெளரிஸ், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இந்த விவகாரம் குறித்து தமது எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் தமிழ்மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளில் மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments