ஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்

/files/detail1.png

ஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்

  • 0
  • 0

 

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் 83 பேர் இலங்கைக்கு திரும்பச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நடந்த  உள்நாட்டுப்போர் காரணமாக தஞ்சம் கோரி ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு வந்தனர். இவ்வாறு வந்தவர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில்  உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும்  ஈழ அகதிகள் தமது சொந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வரும் 31ம் திகதி 39  ஈழ அகதி குடும்பங்கள் இலங்கை வரவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு விவகார அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

சுயவிருப்பின் பெயரில் 39 குடும்பங்களைக்கொண்ட 83 பேர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், இவர்களில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளனர். இவர்கள் யாழ்ப்பானம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமது சொந்த நிலங்களுக்குச் செல்லவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இலவச பயணச்சீட்டு, பெரியவர்களுக்கு 10,000 ரூபாவும் இளையவர்களுக்கு 5,000 ரூபாவும் போக்குவரத்து செலவுக்கு 2500ரூபாவும், வழங்கப்படுவதோடு, தனிபர்களுக்கு 5,000ம் ரூபா மற்றும் ஒரு குடும்பத்திற்கு 10,000ரூபாயும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் துாதரகத்தால் வழங்கப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை மீள்குடியேற்ற அமைச்சினால் விமான நிலையத்தில் வைத்து தற்காலிக குடியிருப்புக்கள் அமைக்க 25,000 ரூபாயும் உபகரணங்களுக்கு 3000ரூபாயும் காணி துப்பரவு செய்வதற்கு 5000ம் வழங்கப்படுவதுடன் வாழ்வாதாரத்திட்டங்களிலும் வீட்டுத்திட்டங்களின் தெரிவின் போது சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave Comments

Comments (0)