71வது இலங்கையின் தேசிய சுதந்திர தினம் – தமிழர்கள் போராட்டம்

/files/detail1.png

71வது இலங்கையின் தேசிய சுதந்திர தினம் – தமிழர்கள் போராட்டம்

  • 0
  • 0

71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய சுதந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சாலி தம்பதியர் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டானர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே  ஆகியோருடன் மேலும் பலர் கலந்துகொண்டனர். இம்முறை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே  இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

alt text

இந்நிலையில், இன்று தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கில் கரிநாளாக இலங்கையின் சுதந்திர தினம்  கடைப்பிடிப்படுகின்றது.

alt text

முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து யாழ் மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

alt text

இதே போல் முல்லைத்தீவு மாட்டத்தில் உள்ள கேப்பாப்புலவு பகுதியில் 706 நாட்களாக நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று கறுப்புக்கொடி காட்டி அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தமது ஆதரவைத்தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

alt text

காணிகளை விடுவிக்கக்கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

alt text

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கண்ணீருக்கு தீர்வென்ன? கிழக்கில் போராட்டம்.

alt text

இந்த போராட்டத்தில்,  இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேசம் நேரடியாக தமிழர்களுக்கு இலங்கை அரசிடம் இருந்து தீர்வைப்பெற்றுத்தர வேண்டும். மன்னார் மனித புதைகுழி குறித்து விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஐநாவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)