படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல்

/files/detail1.png

படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல்

  • 3
  • 0

எதிர்வரும் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில், படத்தொகுப்பாளர் சான் லோகேஷுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமா கலைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களைப் பல்வேறுவிதமாக நடத்தி வருகிறது. தமிழ் சினிமா நூற்றாண்டு தொடர் கலந்துரையாடல், பயிற்சிப்பட்டறைகள், திரையிடல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளுடன் சேர்ந்து நிகழ்கால தமிழ் சினிமாவை மையப்படுத்தியும், தொடர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருகிறது. அவ்வகையில், இந்த வாரம் உறுமீன் படத்தின் மூலம் அறிமுகமான படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வடபழனியில் உள்ள பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடக்கவிருக்கும் கலந்துரையாடலில் பங்கேற்கிறார். சமீபத்தில் திரையரங்கில் வெளியான பச்சை மஞ்சள் சிவப்பு, ராட்சசன், தர்மபிரபு, இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகவிருக்கும் கண்ணை நம்பாதே ஆகிய திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இயக்குனர் மேஜையிலிருந்து படத்தொகுபாளர் மேஜைக்கு வரும் கதை எவ்வாறு ஒரு திரைப்படமாக மாறுகிறது மேலும் அதற்கான தொடர்பு என்ன? படத்தொகுப்பில் கையாள வேண்டிய உத்திகள் என்ன? வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் படத்தொகுப்பில் அடைந்துள்ள மாற்றங்கள் குறித்த கேள்விகளுடன் கலந்துரையாடலாம்.

அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: 9840644916

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42

நிகழ்விற்கு வர விரும்பும் நண்பர்கள் இந்த இணைப்பில் உங்கள் வரவை உறுதிப்படுத்துங்கள். முகநூல் சனிக்கிழமை அன்று உங்களுக்கு நினைவுபடுத்தும்.

https://www.facebook.com/events/1324787061022532/permalink/1324787077689197?sfns=mo

Leave Comments

Comments (0)