இயக்குனர் V.J கோபிநாத் மற்றும் கதையாசிரியர் பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல்

/files/detail1.png

இயக்குனர் V.J கோபிநாத் மற்றும் கதையாசிரியர் பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல்

  • 0
  • 0

 

எதிர்வரும் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் `ஜீவி` திரைப்படத்தின் இயக்குனர் V.Jகோபிநாத் மற்றும் அப்படத்தில் கதை, திரைக்கதை, எழுத்து ஆகியவற்றில் பணிபுரிந்த பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமா கலைஞர்களுடன் பல்வேறு   கலந்துரையாடல்களை நடத்திவருகிறது. அதிலும் சமீப காலமாக  முற்றிலும் மாறுப்பட்ட வடிவில் நடத்தி வருகிறது. அவ்வகையில் எதிர்வரும் 10ஆம் தேதி, சமீபத்தில் வெளியான ’ஜீவி’ திரைப்படத்தின் இயக்குனர் V.J கோபிநாத் மற்றும் அப்படத்தில் கதை, திரைக்கதை, எழுத்து ஆகியவற்றில் பணிபுரிந்த பாபு தமிழ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது. நண்பர்கள் திரளாகக் கலந்துகொண்டு `ஜீவி திரைப்படம் குறித்தும், அத்திரைப்படத்தில் இயக்கிய அனுபவம், மற்றும் மாற்றுக்கோணத்தில் கதை உருவாக்கம் குறித்தும்` கலந்துரையாடல் செய்யலாம்.

நாள்: 10.08.2019 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42

அனுமதி இலவசம்...
 

Leave Comments

Comments (0)