மான்ஸ்டர் திரைப்பட இயக்குனர் நெல்சன் வெங்கடேனுடன் கலந்துரையாடல்

/files/detail1.png

மான்ஸ்டர் திரைப்பட இயக்குனர் நெல்சன் வெங்கடேனுடன் கலந்துரையாடல்

  • 0
  • 0

 

சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேனுடன் கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில் நடைபெறவுள்ளது.

தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமா கலைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களைப் பல்வேறுவிதமாக நடத்தி வருகிறது. இந்த வாரம் முற்றிலும் மாறுப்பட வடிவில் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது. சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம்  மக்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குக் கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது. இவர் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில்அறிமுகமானவர்.

alt text

இந்த கலந்துரையாடல் வழக்கம்போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட வடிவில் நடக்கவிருக்கிறது. முதலில் தெரிவு செய்யப்பட்ட பார்வையாளர்கள் நான்கு பேருடன் நெல்சன் வெங்கடேசன் விரிவான கலந்துரையாடல் செய்வார். அதன் பின்னர் பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். இன்றைய தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட திரைப்பட இயக்கம், கதை உருவாக்கம் மற்றும் திரைக்கதை அமைப்பு ஆகிய தலைப்புகளை முன்னிறுத்தி கேள்விகளைக் கேட்கலாம். இது ஒரு சாதாரண கலந்துரையாடல்போல் இல்லாமல் உங்களது கேள்வி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பயனுள்ள கலந்துரையாடலாக மாற்ற அனைவரும் உங்களது கேள்விகளுடன் தயாராக வாருங்கள். நீங்கள் மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களையும் அழைத்து வாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

நாள்: 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42
 

Leave Comments

Comments (0)