நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விஸ்வநாதனுடன் கலந்துரையாடல்

/files/detail1.png

நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விஸ்வநாதனுடன் கலந்துரையாடல்

  • 0
  • 0

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில் நகைச்சுவை நடிகர் சாம்ஸுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமா கலைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களைப் பல்வேறுவிதமாக நடத்தி வருகிறது. தமிழ் சினிமா நூற்றாண்டு தொடர் கலந்துரையாடல், பயிற்சிப்பட்டறைகள், திரையிடல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளுடன் சேர்ந்து நிகழ்கால தமிழ் சினிமாவை மையப்படுத்தியும், தொடர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருகிறது. அவ்வகையில், இந்த வாரம் "ஜாவா சுந்தரேசன்" "நகை கடைக்காரர் மகன்" என செல்லமாக அழைக்கப்படும் சாம்ஸ் விஸ்வநாதனுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. "காதல் மன்னன்" படத்தின் மூலம் அறிமுகமாகி "சச்சின்" "மனம் கொத்தி பறவை" "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்" "பயணம்" என தனது கலைப் பயணத்தில் வெற்றிகரமாக பயணித்து சமீபத்தில் வெளியான "திட்டம் போட்டு திருடுற கூட்டம்" வரை நூறு படங்களை கடந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகருக்கான இடம்? தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் பங்கு? தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது? நகைச்சுவை கலைஞர்களுக்கு உரிய இடம் தமிழ் சினிமா கொடுத்திருக்கிறதா? இதுபோன்ற கேள்விகளுடன் நண்பர்கள் திரளாக கலந்துகொண்டு  நடிகர் சாம்ஸுடன் கலந்துரையாடலாம்.

அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: 9840644916

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42
 

Leave Comments

Comments (0)