”கேம் ஓவர்” திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கலந்துரையாடல்

/files/detail1.png

”கேம் ஓவர்” திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கலந்துரையாடல்

  • 0
  • 0

 

எதிர்வரும் 23ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமாவில், சமீபத்தில் வெளியான ”கேம் ஓவர்” திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமா கலைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களைப் பல்வேறுவிதமாக நடத்தி வருகிறது. தமிழ் சினிமா நூற்றாண்டு தொடர் கலந்துரையாடல், பயிற்சிப்பட்டறைகள், திரையிடல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளுடன் சேர்ந்து நிகழ்கால தமிழ் சினிமாவை மையப்படுத்தியும், தொடர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருகிறது. அவ்வகையில், சமீபத்தில் வெளியான ”கேம் ஓவர்” திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கிறார். மாயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், இறவாக்காலம் என்னும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

alt text

இந்த ஆண்டின் பொதுவான தமிழ் சினிமாக்கள் பற்றியும், கேம் ஓவர் திரைப்படம் பற்றியும், படம் பேசும் கருப்பொருள் சார்ந்தும், சினிமா வணிகம் சார்ந்தும் நண்பர்கள் இயக்குனரோடு கலந்துரையாடலாம்.

அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

தொடர்புக்கு: 9840644916

நாள்: ஜுன் 23 ஞாயிறு மாலை - 5 மணி.

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7 மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி
(வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்)

Leave Comments

Comments (0)