இயக்குநர் லெனின் பாரதியின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

/files/detail1.png

இயக்குநர் லெனின் பாரதியின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

  • 0
  • 0

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பியூர் சினிமாவில் இயக்குநர் லெனின் பாரதி நடத்தும் சினிமா பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் சுயாதீன திரைப்படவிழாவை தமிழ்ஸ்டுடியோ நடத்தியது. மக்களிடமிருந்து நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த மாபெரும் விழா, எதிர்பார்த்த செலவை விடப் பல மடங்கு அதிகமாகச் செலவாகியது. இந்த விழாவிற்கு பிறகான தமிழ் ஸ்டுடியோவின் நிதியைச் சரிசெய்ய இன்னமும் சில ஆண்டுகள் ஆகும். அந்த நிதியைச் சரிசெய்வதன் தொடர்ச்சியாக இந்த மாதம் 9ஆம் தேதி இயக்குநர் லெனின் பாரதி நடத்தும் சினிமா பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்திருக்கிறோம். 

இயக்குநர் லெனின் பாரதி அரசியலை மிக நேர்த்தியாகப் பிரச்சாரம் இன்றி கலையாக மக்களுக்குக் கொண்டு செல்லும் வல்லமை பெற்றவர். மேற்குத் தொடர்ச்சி மலை தமிழின் மிக முக்கிய சினிமாக்களில் ஒன்று. அப்படியான இயக்குநர் ஒருவர் நடத்தும் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றுப் பயனடையுங்கள். சினிமாவை கற்க முக குறைந்த தொகையில் தமிழ் ஸ்டுடியோ உருவாக்கிக் கொடுக்கும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். உடனே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

alt text

நேரம் : 09-06-2019, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

நன்கொடை: 1000 ரூபாய் (ஆயிரம் ரூபாய்)

தலைப்பு: கதை எப்படி காட்சியாகிறது, காட்சி எப்படி ஷாட் ஆகிறது, ஷாட் பிரிக்கும் வழிமுறைகள், அரசியல் சினிமாவின் தேவை.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்
https://goo.gl/maps/bMYcANLkNG42

Leave Comments

Comments (0)