தன் வெற்றியின் ரகசியத்தை வெளிப்படுத்தும் தோனி

/files/detail1.png

தன் வெற்றியின் ரகசியத்தை வெளிப்படுத்தும் தோனி

  • 0
  • 0

-V.கோபி

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தபோது தான் கற்றுகொண்டதையும் தனது தத்துவங்களையும் தனது 37வது பிறந்தநாளின் போது தோனி நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். 

தான் தலைவராக இருந்தபோது சில வீர்ர்களின் ஈகோவை பாதிக்காதவாறு அவர்களிடம் பொது அறிவை ஏற்படுத்துவது மிகப்பெரும் சவாலான பணி என கூறும் தோனி, “பல சமயங்களில் இதுதான் பொதுஅறிவு என நினைத்து கொள்வேன். ஆனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை. இதையெல்லாம் நான் எதற்கு சொல்ல வேண்டும் என் நீங்கள் நினைக்கலாம். ஒரு அணியாக இருக்கும்போது நீங்கள் கூறியே ஆக வேண்டும்”.

“அணியில் சிலர் புத்திகூர்மையுடன் நடந்து கொள்வார்கள். ஏன் இவர் இதேயெல்லாம் நம்மிடம் சொல்கிறார், நமக்குதான் தெரியுமே என்று நினைப்பார்கள். ஆனால் நான் கூறுவது அவர்களுக்கு இல்லை. எளிதில் புரிந்து கொள்ளாத வீர்ர்களுக்கே நான் கூறுகிறேன். அதே நேரத்தில் தனியாக வீரரை அழைத்து கூறுவது மிகவும் மோசமான செயல். ஏனென்றால் என்னை மட்டும் தனிமை படுத்திவிட்டார் என குறிப்பிட்ட வீர்ர் நினைக்ககூடும்.”

“முதலில் வீரர்களின் இறுக்கத்தை உடைக்க வேண்டும். ஆகையால் அனைவரிடமும் நேரம் செலவழிக்கும் வகையில் எங்களின் சுற்றுபுறத்தை மாற்றிகொள்கிறோம். அப்போதுதான் சில வீர்ர்கள் நம்மிடம் பேசுவார்கள். அவர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அவர்களின் பேச்சை வைத்தே நாம் கண்டுபிடிக்க முடியும்.”

“என்னை பொருத்தவரை ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்களோடு நம் நேரத்தை செலவழிக்க வேண்டும். ஒருவரை பற்றி தெரியாதபட்சத்தில் அவர்களுக்கு நீங்கள் எப்படி அறிவுரை கூற முடியும். ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருப்பதால் அவர்களின் ஆழ் மனதிற்குள் நாம் செல்ல தயாராக இருக்க வேண்டும்.”

அணியில் தேர்வு செய்யாத காரணத்தை வீரரிடம் கூறுவது உணர்ச்சிகரமான விஷயம் என கூறும் தோனி, “என்னை எதற்கு இன்றைய ஆட்டத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என வீர்ர்கள் கேட்பதற்கு பதில் கூறுவது என்னை பொறுத்தவரை மிகப்பெரும் பிரச்சனை. அதற்கு பின்னர் நான் உங்களிடம் கேள்வி கேட்டேன் ஆனால் அதற்கு பதில் தேவையில்லை எனவும் கூறுவார்கள்.”

மோட்டார் சைக்கிள் -- ஹர்பஜன் சிங் ஒப்பீடு குறித்து,

“IPL இறுதிபோட்டிக்கு முன் பத்திரிக்கையாளர் ஒருவர்,  ‘ஹர்பஜன் சிங் போன்ற அனுபவமிக்க வீர்ர் ஏன் நேற்றைய ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை’ என்று கேட்டார். அதற்கு நான் கூறிய பதில் இதுதான். ‘என்னிடம் அதிகமான மோட்டார் சைக்கிளும் கார்களும் உள்ளது உங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் எது எனக்கு தேவையாக இருக்குமோ அதையே நான் ஓட்டுவேன். மழை பெய்தால் காரில் செல்வேன், இல்லாவிட்டால் பைக்கில் சந்தொஷமாக செல்வேன். அதுபோலவே ஹர்பஜன் சிங் தேவைப்படும் சமயத்தில் கட்டாயம் அவரை பந்து வீச சொல்வேன். எங்கள் அணியில் 7 பவுலர்கள் உள்ளார்கள். இந்த IPLலில் ரெய்னா ஒரு ஓவர் கூட வீசவில்லை.

அணியில் இருக்கிறார் என்ற காரனத்திற்காக தேவையில்லாத சமயத்தில் எதற்கு ஒரு வீரர் பந்து வீச வேண்டும்?”

தன் எண்ணத்தை வெளிப்படுத்தி கொள்ளாத செய்கையும் அவரின் அளவான கொண்டாட்டமும் கிரிக்கெட் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஒவ்வொரு முறை அணி வெற்றி பெற்றபின் கோப்பையை வாங்கிய மறுநிமிடமே வீர்ர்களின் பின்னால் சென்று தோனி ஒதுங்கிகொள்வார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“ஒரு அணியாக விளையாடிவிட்டு தலைவர் மட்டும் வெற்றி கோப்பையை வாங்கச் செல்வது நியாமான செயல் என நீங்கள் நினைக்கிறீர்களா? இது அதிகப்படியான வெளிப்பாடு. ஏற்கனவே கோப்பையோடு 15 நொடிகள் நின்றுவிட்டீர்கள், அதற்குமேலும் அங்கு நிற்பதற்கு நான் விரும்புவதில்லை. நிச்சியமாக கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நாம் அனைவரும் விரும்புவோம். அதற்காக எப்போதும் கோப்பையை தூக்கி கொண்டு நிற்க முடியாது. மேலும் அதிக நேரம் வெற்றி கோப்பையோடு நேரம் செலவழிக்காமல் இருந்தால்தான் அடுத்த கோப்பையை வெல்ல ஆர்வம் ஏற்பட்டு இன்னொரு 15 நொடி கவனஈர்ப்பு நமக்கு கிடைக்கும். இதையே எங்கள் அணியினரிடமும் நான் கூறுகிறேன்.”
 

Leave Comments

Comments (0)