புலிகளை அழித்தது போல் அழித்துவிடுங்கள்- முப்படையினருக்கு மைத்திரிபால கட்டளை

/files/detail1.png

புலிகளை அழித்தது போல் அழித்துவிடுங்கள்- முப்படையினருக்கு மைத்திரிபால கட்டளை

  • 0
  • 0

விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதைப்போன்று போதைப்பொருள் வியாபாரம் விரைவில் அழிக்கப்பட்டு விடும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மிக விரைவில் துாக்குத்தண்டனை விதிக்கப்படும் என்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான முழு பொறுப்பும் முப்படையினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதைப்போன்று, போதைப்பொருள் வியாபாரமும் விரைவில்  அழிக்கப்படும்.போதைப்பொருள் வியாபாரிகள் உலக அரசியலை வீணடிக்கின்றனர். ஆகவே இந்த போதைப்பொருள் வர்த்தகம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். பிலிப்பைன்ஸ் ஒரு காலத்தில் போதைப்பொருள்களால் மலிந்து காணப்பட்டது. அனால் அந்த நாட்டு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையால் அங்கு போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இந்த  குற்றச்செயற்பாட்டை முன்னெடுத்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில்  கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றது.

அதே போல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு வெகுவிரைவில் இலங்கையில் துாக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)