தலித் ஒருவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆணவ சாதியினர் அனுமதி மறுப்பு

/files/detail1.png

தலித் ஒருவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆணவ சாதியினர் அனுமதி மறுப்பு

  • 0
  • 0

 

மதுரை அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆணவ சாதியினர் தடை விதித்ததால், அந்த சடலத்தைக் கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவில் உள்ளது பி. சுப்புலாபுரம். இந்த கிராமத்தில் வசித்துவருகிற தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) உயிரிழந்துள்ளார். இந்த பி. சுப்புலாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொது சுடுகாட்டில் தலித் மக்கள் உயிரிழந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆணவ சாதியினர் அனுமதிப்பதில்லை. அதனால் சமீப காலமாகவே தலித் மக்கள் உயிரிழந்தால் அவர்களின் உடலை பொது சுடுகாட்டிற்கு எதிரே உள்ள வெட்ட வெளியில்தான் அடக்கம் செய்துவந்தனர். இந்நிலையில், நேற்று அந்த பகுதியில் பலத்த மழை பெய்துவந்தது. அதனால் தலித் மக்கள் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆணவ சாதியினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனால், இறந்தவரின் உடலைக் கொட்டும் மழையில் வெட்ட வெளியில், தார்ப்பாய்போட்டு மூடி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

Leave Comments

Comments (0)