நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 25 தோழர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட 25 தோழர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0

மேட்டுப்பாளையத்தில் 17 தலித் மக்கள் உயிரிழந்ததற்கு நீதிகேட்டுப் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்ய கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில், துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு சொந்தமான உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றி, ஆணவ சாதி மக்களையும் தலித்  (அருந்ததியர்) மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாகக் கடந்த டிசம்பர் 03ஆம் தேதி பெய்த மழையினால் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

தீண்டாமை சுவரால் 17  தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. மேலும் காவல்துறையினர் இந்த கொடூரத்திற்குக் காரணமானவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாமல், 17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி அடக்குமுறையைச் செலுத்தி அவர்களைக் கைது செய்திருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யக்கோரியும், போராடிய தோழர்களைத் தாக்கிய காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்ய கோரியும், இறந்த மக்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், அரசு வேலையும் வழங்கக்கோரியும் இன்று (டிசம்பர் 04) மே 17 இயக்கம் சார்பில், மாலை 5 மணிக்கு மதுரை அம்பிகா தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. 

Leave Comments

Comments (0)