கல்விக் கட்டமைப்பை முற்றிலும் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

கல்விக் கட்டமைப்பை முற்றிலும் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0

 

எதிர்வரும் 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மே 17 இயக்கத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும் அதன் வழியாகச் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பலரும் எதிர்த்துவருகின்றனர். சேவைத் துறையாக இருந்த கல்வித் துறையை வர்த்தக துறையாக மாற்ற ஆளும் பாசிச பாஜக முடிவெடுத்திருக்கிறது. மையமாக்குதல், சாதியமயமாக்கல், வணிகமயமாக்கல் ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி இந்த புதிய கொள்கை முறை இருப்பதாகவும், அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையாக இல்லாமல், இது கல்வியைச் சர்வதேசச் சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனாக இருக்கிறது என்றும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் வழுபெற்றுவருகிறது. 3, 4, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பருவ தேர்வு (செமஸ்டர்) ஏழை மாணவர்களைக் கல்வி கற்கவிடாமல் தடுக்கும் அத்தனை வழிமுறைகளும் இந்த புதிய கல்விக்கொள்கை முறையில் இருக்கிறது. அதனால் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரித் தொடர் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன.

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், அந்த புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் இருக்கிற ஒரு திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடைபெற்றுவந்த நிலையில், 2019-2020 கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் இதனைக் கண்டித்து எதிர்வரும் 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கல்வி பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மே 17 இயக்கத் தோழர்கள், தமிழ்த்தேசியப் பேரியக்க தோழர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Leave Comments

Comments (0)