எனக்கு நீ சரிசமமா ?
February 20, 2021 - selvamani T
February 26, 2021,5:55:08 PM
நடூரில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து உயிரிழந்த 17 தலித்துகளுக்கு நியாயமான நீதி கேட்ட சனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில், துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றி, ஆணவ சாதி மக்களையும் தலித் மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.
கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாகக் கடந்த டிசம்பர் 03ஆம் தேதி பெய்த மழையினால் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.
தீண்டாமை சுவரால் 17 தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. மேலும் 17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்க்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்குக் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் தோழர்களின் முழு முயற்சியால் அந்த முழு தீண்டாமை சுவரும் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், நடூரில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து உயிரிழந்த 17 தலித்துகளுக்கு நியாயமான நீதி கேட்ட சனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறையைக் கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு மதுரை பழங்காநத்தம் நடராஜ் திரையரங்கம் அருகில் ”போராடிய தோழர்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப்பெறவேண்டும், நிபந்தனை இன்றி விடுதலை செய்யவேண்டும், பாதிக்கப்பட்ட தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்துவதைக் கைவிட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreFebruary 26, 2021 - சினிமா
February 26, 2021 - சினிமா
February 26, 2021 - சினிமா
February 26, 2021 - சினிமா
February 26, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments