திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
March 3, 2021,2:42:31 PM
வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு, நாய்க்கன் கொட்டாய், மேட்டுப்பாளையம் என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது சாதிய ஆதிக்கம் என்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் தெரிவித்துள்ளனர்.
"கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடு தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.
20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.
இதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது சென்னை உயர்நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.
பொசுக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் செய்த ‘குற்றம்’ என்ன?
1. தலித்துகளாகப் பிறந்தது முதல் குற்றம்.
2. கூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.
3. சாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் செய்தார்கள்.
வெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்கவில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு, நாய்க்கன் கொட்டாய், மேட்டுப்பாளையம் என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
ஜாதி மதங்களைக் கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்..! ஜாதி ஆதிக்க கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்..!” என்று இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
February 26, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 20, 2021 - selvamani T
February 19, 2021 - selvamani T
Enter Your Email To Get Notified.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.
read moreMarch 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
March 3, 2021 - சினிமா
Enter Your Email To Get Notified About Our New Solutions.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Ex quem dicta delicata usu, zril vocibus maiestatis in qui.
Leave Comments