மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தபட்ட தொழிலாளி  உயிரிழப்பு

/files/detail1.png

மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தபட்ட தொழிலாளி  உயிரிழப்பு

  • 0
  • 0

சென்னை ராயபேட்டையில் மலக்குழி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட துப்புரவு தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது.

சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாப்பிங் மாலின் கீழ் தளத்தில் உள்ள மலக்குழியில் அடைப்பு ஏற்பட்டதால் அதை சரிசெய்ய இன்று (நவம்பர் 12) காலை அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 துப்புரவு தொழிலாளிகள் சென்றுள்ளனர்.

மலகுழியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ரஞ்சித் குமார் விசவாயு தாக்கி மயக்கமடைந்தார். இதனை பார்த்த அவரது அண்ணன் அருண்குமார் (25) மலக்குழியில் இறங்கி ரஞ்சித்தை காப்பாற்றினார். இதனையடுது அருண்குமார் மலக்குழியிலிருந்து வெளியில் ஏற முற்பட்டபோது விச வாயு தாக்கியதில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைகாக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

Leave Comments

Comments (0)