காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்ட தலித் இளைஞன் தற்கொலை

/files/detail1.png

காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்ட தலித் இளைஞன் தற்கொலை

  • 0
  • 0

 

1 லிட்டர் பெட்ரோல் திருடியதாக கூறி தலித் இளைஞனை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் சித்ரவதை செய்ததில், மனமுடைந்த அந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.

தேனி மாவட்டம், பவளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (19). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி காலை, 1 லிட்டர் பெட்ரோல் திருடியதாக கூறி வருசநாடு காவல்துறையினர் (சீருடை அணியாமல்) சத்தியமூர்த்தியை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துசென்று கடுமையாக அடித்து, ஆபாசமான வார்த்தைகளில் திட்டி, சித்திரவதை செய்து இழிவுபடுத்தியுள்ளனர். மேலும் அன்று இரவு 8 மணிக்கு வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

alt text

இதில், மனமுடைந்த சத்தியமூர்த்தி அன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு வருசநாடு சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன்தான் காரணம் என்று சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave Comments

Comments (0)