தலித் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த ஒருவர் கைது, இருவர் தலைமறைவு

/files/detail1.png

தலித் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த ஒருவர் கைது, இருவர் தலைமறைவு

  • 0
  • 0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், கோசம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் லீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுமி கடந்த 24ஆம் தேதி கால்நடைகளுக்குத் தீவனம் போடுவதற்காகப் புல் அறுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முகமது டெஸ்ட்,  முகமது ரீட், முகமது நஜிம் ஆகிய மூன்று பேரும் லீலாவை மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதோடு, அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். சிறுமி வலி தாங்கமுடியாமல் கத்தியதையடுத்து அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததும், மூன்று பேரும் தப்பியோடியுள்ளனர். இதில் முகமது நஜிமை மட்டும் பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மீதமுள்ள இருவரைத் தேடிவருகின்றனர். 

குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ .25,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

Leave Comments

Comments (0)