நீதியைத் தேடும் சடலங்கள்- தீண்டாமை சுவர் விழுந்து 17 பேர் கொல்லப்பட்ட அவலம் குறித்தான கருத்தரங்கம்

/files/detail1.png

நீதியைத் தேடும் சடலங்கள்- தீண்டாமை சுவர் விழுந்து 17 பேர் கொல்லப்பட்ட அவலம் குறித்தான கருத்தரங்கம்

  • 1
  • 0

எதிர்வரும் 29ஆம் தேதி ”நீதியைத் தேடும் சடலங்கள்” என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கோவையில் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்னும் பெயரில், துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. ஆணவ சாதியைச் சேர்ந்த இவருடைய வீட்டைச் சுற்றி, ஆணவ சாதி மக்களையும் தலித் மக்களையும் இரண்டாகப் பிரிக்கும் வகையில் 20 அடி தீண்டாமை சுவரைக் கட்டியுள்ளார்.

கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த சுவர் பராமரிப்பின்மை காரணமாகக் கடந்த டிசம்பர் 03ஆம் தேதி பெய்த மழையினால் அதிகாலை 5.30 மணிக்குத் தலித் மக்கள் குடியிருப்பின் மீது இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதிலிருந்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்துள்ளனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள்.

தீண்டாமை சுவரால் 17 தலித் மக்களை ஆணவ சாதி வெறி கொலை செய்திருக்கிறது. மேலும் 17 பேரின் கொலைக்கு நீதி கேட்டுப் போராடிய  நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்க்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் தோழர்களின் முழு முயற்சியால் அந்த முழு தீண்டாமை சுவரும் இடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாகத் தீண்டாமை சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். ஆனால் கடந்த 20ஆம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

alt text

இந்நிலையில், ”நீதியைத் தேடும் சடலங்கள் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் விழுந்து 17 பேர் பலி- மறைக்கப்பட்ட உண்மைகள்” என்ற தலைப்பில் கோவை பெரியார் பதிப்பகத்தில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றனர் தம்மம் சிந்தனையாளர் பேரவையும், சமூக நீதி அமைப்பும். இந்த கூட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் தோழர் எவிடன்ஸ் கதிர், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

Leave Comments

Comments (0)