தீர்வுத்திட்டத்தைக் குழப்பியது கூட்டமைப்பு – மகிந்த குற்றச்சாட்டு

/files/detail1.png

தீர்வுத்திட்டத்தைக் குழப்பியது கூட்டமைப்பு – மகிந்த குற்றச்சாட்டு

  • 0
  • 0

 

தமது ஆட்சியின் போது தேசிய பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முயற்சி  தோல்வி கண்டமைக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே காரணம் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித்தலைவருமான மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலிடம் இருந்தே தீர்வைப்பெற கூட்டமைப்பினர் விரும்பினர். அதனால் பேச்சுவார்தைகளை அவர்கள் குழப்பினர் எனறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று செனட் சபையை உருவாக்குவதற்கு யோசனை முன் வைத்திருந்தோம். அன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பை வழங்கியிருந்தால் தீர்வை எட்டியிருக்கலாம். ஆனால் தீர்வை நோக்கி பயணிப்பதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் ஆட்சிக்கு வந்தால் கூட்டமைப்பு எதிர்ப்பார்ப்பதை ரணில் வழங்குவார் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு என  மகிந்த தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை  சிறிய நாடாகும். இங்கு தனி இராச்சியம் குறித்துக்கதைப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் முதல்வரை கும்பிட்டுக்கொண்டிருக்கும் நிலை உருவாகும் என்றும் மகிந்த  கூறியுள்ளார்.

Leave Comments

Comments (0)