தோழர் இரணியனைக் கைது செய்த காவல்துறை: குவியும் கண்டங்கள் 

/files/detail1.png

தோழர் இரணியனைக் கைது செய்த காவல்துறை: குவியும் கண்டங்கள் 

  • 0
  • 0

 

 

கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியனைக் கைது செய்துள்ளது காவல்துறை.  

நாகை மாவட்டம், மே.மாத்தூர் முதல் மாகாணம் வரை கெயில் குழாய்ப் பதிப்பு வேலையைத் தீவிரப்படுத்தி வருகிறது கெயில் நிறுவனம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முடிகண்டநல்லூர்,  உமையாள்புரம், வேட்டங்குடி, திருநாங்கூர் கிராம மக்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட முடிகண்ட நல்லூர், உமையாள்புரம் பகுதிகளில் குறுவை சாகுபடி நடந்திருக்கும் பச்சை வயல்வெளிகளில் கனரக இயந்திரங்களை இறக்கி குழாய்ப் பதிக்கும் வேலையை கெயில் நிறுவனம் செய்துவருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும்  தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன், விஷ்ணுக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருந்த காவல் துறை, நான்கு நாட்களாகப் போராட்டம் நடந்துக் கொண்டிருப்பதால் காவிரிப்படுகைக்கு வெளியே இப்போராட்டங்கள் கவனம் பெற்று வந்த நிலையில், இன்று உமையாள்புரத்தில் இருந்த தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியனைக் கைது செய்துவிட்டது காவல் துறை. 

தோழர் இரணியனின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Leave Comments

Comments (0)