அநீதிக் கதைகள் வெளியீட்டு விழா !
January 9, 2021 - selvamani T
January 15, 2021,10:24:08 PM
V. கோபி
\r\n
\r\nகோயம்புத்தூர் நகரத்தில் தண்ணீர் விநியோகிக்கும் சேவையை 400 மில்லியன் யுரோ கொடுத்து பிரெஞ்ச் நாட்டின் சூயஸ் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த 26 வருட திட்டம் சூயஸ் நிறுவனம் இந்தியாவில் பெற்ற மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கோவையின் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தினசரி தண்ணீர் தேவையை சூயஸ் நிறுவனம் நிவர்த்தி செய்ய வேண்டும்.
\r\nஇந்தியாவின் முக்கிய தொழில் நகரமான கோயம்புத்தூரில் தண்ணீர் வழங்கும் சேவையை தரப்படுத்தவும்,பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப 24 மணி நேரமும் தண்ணீர் சேவையை வழங்கவும் சரியான நிறுவனத்தை மாநகர அதிகாரிகள் தேடிக்கொண்டிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மொத்த தண்ணீர் விநியோகிக்கும் அமைப்பையும் மேம்படுத்தி,சீரமைத்து,செயல்படுத்தும் பொருப்பு சூயஸ் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கவும் சேவை தரத்தை உயர்த்தவும் குறைதீர்ப்பு தொலைபேசி மையம் அமைக்கவும் கூறப்பட்டுள்ளது.
“பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இந்தியாவில் மக்கள் தொகையும் நகர்ப்புற வளர்ச்சியும் வேகமாக வளர்ந்து வருகின்றன், இதன்காரணமாக மக்கள் தரமான சேவையை எதிலும் எதிர்பார்க்கிறார்கள். அல்ஜீரியா, கசபிளாங்கா,சோங்கிங் மற்றும் பல இந்திய நகரங்களில் தண்ணீர் சேவையை வழங்கி வருவதால் எங்களுக்கு போதிய அனுபவம் உள்ளது. ஆகவே கோயம்புத்தூர் மக்களுக்கு தரமான தண்ணீர் சேவையை வழங்குவோம் என உறுதியளிக்கிறோம்” என சூயஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மேரி-ஏங் திபான் கூறுகிறார்.
2012ம் ஆண்டு டெல்லியின் மாளவியா மாவட்டத்தில் தண்ணீர் விநியோகிக்கும் சேவையை பெற்றதிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது சந்தையை இந்தியாவில் சூயஸ் நிறுவனம் பலப்படுத்தியுள்ளது.கொல்கத்தா,பெங்களூரூ போன்ற மிகப்பெரிய நகரங்களிலும் தனது சேவையை வழங்கி வருகிறது இந்நிறுவனம்.தினமும் 5.5 பில்லியன் லிட்டர் குடிதண்ணீரை 4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இந்தியாவில் வழங்கி வருவதாக சூயஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
ஆனால், கோவை மாநகருக்கு நீர் விநியோகம் செய்யும் சேவையை குறித்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்கான மிகப்பெரிய ஆபத்தின் தொடக்கமாகவே பார்க்கவேண்டும். குடிநீர் விநியோகம், மாநகரத்துக்கான நீர் மேலாண்மை உள்ளிட்ட அடிப்படையான செயல்பாடுகள் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. நீரின் மீதான உரிமை சூயஸ் நிறுவனத்துக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.
கல்வி, சுகாதாரம், நீர் விநியோகம் போன்ற மக்களின் அடிப்படை தேவைகளை அவர்களது உரிமையாக கருதி தடையின்றி வழங்க வேண்டியது அரசின் கடமை. இவற்றில் முதன்மையான அங்கம் வகிக்கும் நீர் விநியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் கொடுத்திருப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். தொழில்துறை மண்டலமாகவும் இருக்கும் கோவையில் மக்களுக்கான குடிநீரைவிட தனியார் நிறுவனங்களுக்கு தாராளமாக தண்ணீரை வழங்குவதற்கான சாத்தியங்களும் இதில் அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டுவரும் நிறுவனம் என்றாலும் அதன் உள்ளார்ந்த மறைமுக திட்டங்களை ஆராய்ந்து எச்சரிக்கையாக இருப்பது பல்லுயிர் ஜீவிதத்திற்கும் ஆதாரமாக விளங்கும் நீர் உரிமையை தற்காத்துக்கொள்ள உதவும்.
\r\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments