குடியுரிமை சட்டத் திருத்த மசோதா- உயர்நீதிமன்ற முற்போக்கு ஜனநாயக இடதுசாரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/files/detail1.png

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா- உயர்நீதிமன்ற முற்போக்கு ஜனநாயக இடதுசாரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

  • 0
  • 0

 

பாசிச பாஜக கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 13) சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு ஜனநாயக இடதுசாரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து இன்று இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 மற்றும் 15-க்கு எதிரான, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2019-ஐ திரும்பப்பெறக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் திரும்பப் பெறக்கோரியும், சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு ஜனநாயக இடதுசாரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Leave Comments

Comments (0)