குடியுரிமை சட்டத் திருத்த மசோதா- மேலும் 2 நாட்களுக்கு இணையச் சேவை முடக்கம் 

/files/detail1.png

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா- மேலும் 2 நாட்களுக்கு இணையச் சேவை முடக்கம் 

  • 0
  • 0

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அங்கு மேலும் 2 நாட்கள் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ”ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது. ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையைச் செலுத்துகின்றனர். மேலும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவையும் முடக்கப்பட்டது. தற்போது மேலும் 2 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கியுள்ளது அந்நரசு. போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்களைத் தடுத்துவைத்துள்ளனர்.

Leave Comments

Comments (0)