ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபு நினைவு திரையிடல் - அக்ரஹாரத்தில் கழுதை

/files/detail1.png

ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபு நினைவு திரையிடல் - அக்ரஹாரத்தில் கழுதை

  • 0
  • 0

நாளை மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபுவின் நினைவு திரையிடலாக அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் திரையிடப்படுகிறது.

நண்பர்களே, அண்மையில் மறைந்த ஒளிப்பதிவாளர் கே ராமச்சந்திர பாபு நினைவைப் போற்றும்விதமாக அவர் பணியாற்றிய ஜான் ஆப்ரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் ப்யூர் சினிமாவில் திரையிடப்படுகிறது.

தீபு, ரதினிர்வேதம், ஸ்வப்பனம், பந்நம், ஒரு வடக்கான் வீரகாதா போன்ற 100க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும் அலாவுதீனும் அற்புத விளக்கும், பகல் நிலவு போன்ற தமிழ் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மலையாள சினிமாவில் ஒளிப்பதிவில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மணிரத்னம் போன்றோரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் இவர் இந்திய சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தவர். ஜான் ஆபிரகாம், கே.ஜி ஜார்ஜ் போன்ற இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களின் பெரும்பாலான படங்களுக்கு இவரே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அனைவரும் வருக... அனுமதி இலவசம்...

அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படம் திரையிடல்.

இயக்கம்: ஜான் ஆப்ரகாம் | 90 நிமிடங்கள்

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42

Leave Comments

Comments (0)