சினிமா உருவாக்கம் - மிக முக்கியமான செய்முறை பயிற்சி - இயக்குநர் மிஷ்கின்

/files/detail1.png

சினிமா உருவாக்கம் - மிக முக்கியமான செய்முறை பயிற்சி - இயக்குநர் மிஷ்கின்

  • 0
  • 0

 

எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் இயக்குநர் மிஷ்கின் சினிமா உருவாக்கம் குறித்த மிக முக்கியமான செய்முறை பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துகிறார். 

இந்த பயிற்சிப்பட்டறையில் ஒரு நாள் தியரியாகவும் இன்னொரு நாள் ப்ராக்டிக்கலாகவும் வகுப்பு நடைபெற இருக்கிறது. முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் புது மாதிரியான ஒரு பயிற்சியை வடிவமைத்து தமிழ் ஸ்டுடியோவிற்காக நடத்திக்கொடுக்க இருக்கிறார். இதுவரை நடந்த அனைத்து பயிற்சிகளிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த பயிற்சி உங்கள் சினிமா தேடலின் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும். உடனே முன்பதிவு செய்யுங்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.

எனவே இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொண்டு பயிற்சியில் பங்கேற்றுப் பயனடையுங்கள். இது ஒரு மக்கள் இயக்கத்திற்காக நிதி திரட்டும் பயிற்சி. IFFC 2020க்கு 20 லட்சம் நிதி தேவை, இந்த பயிற்சிப்பட்டறையில் கிடைக்கும் ஒரு பாதி பியூர் சினிமா, படச்சுருளுக்காகவும், இன்னொரு பாதி IFFC க்காகவும் ஒதுக்கப்படும். தேவையான நிதி 13 லட்சம். எனவே தேவையும், உதவ வேண்டும் என்கிற மனநிலையும் உள்ள நண்பர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள். 

நாள்: 24-08-2019, 25-08-2019 சனி மற்றும் ஞாயிறு, முழு நாள் நிகழ்வு

இடம்: சென்னை

கட்டணம்: 10000, மாணவர்கள் 7500, உதவி தொழில்நுட்ப கலைஞர்கள் 5000 (இரண்டு நாட்களும் மதிய உணவு உட்பட)

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

Leave Comments

Comments (0)