சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் - புதிய தொடர் திரையிடல் நிகழ்வு

/files/detail1.png

சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் - புதிய தொடர் திரையிடல் நிகழ்வு

  • 0
  • 0

-கருப்பு

சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் என்கிற புதிய தொடர் திரையிடல் நிகழ்வில் எதிர்வரும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் அனிமேஷன் படங்கள் திரையிடப்படுகிறது.  

தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக பெரும் பண முதலீடு இன்றி, எளிமையாக சினிமாவை கற்க பயிற்சிப்பட்டறை, கலந்துரையாடல் என நிகழ்வுகளையும், Learn from Master என திரையிடல் நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் ஞாயிறு முதல் சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் என்கிற புதிய ஆய்வுத்தொடர் திரையிடல் தொடங்க இருக்கிறது. இந்த வரிசையின் கீழ் திரையிடப்படும் அத்துணை படங்களையும் தொடர்ந்து பார்ப்பதன் வாயிலாக, சினிமாவிற்கு தேவையான கதை, திரைக்கதை, காட்சியமைப்புகளை ஒருவர் புரிந்துகொள்ள இயலும். முதல் இரண்டு படங்களை பார்க்கும்போதே உங்களுக்கு அதில் எப்படி சுவாரசியமும், விறுவிறுப்பும் கூடுகிறது, திரைக்கதையில் என்ன செய்கிறார்கள் என்பதை உணர முடியும். பார்வையாளர்களை எப்போதும் திரைக்குள் கட்டுக்குள் வைத்திருக்கும் திரைக்கதை அமைப்பை இந்த சினிமாக்களின் மூலம் அறியலாம். எனவே "சினிமாவின் மூலம் சினிமாவை கற்கலாம்" என்கிற இந்த தொடர் திரையிடலைத் தவறாமல் பியூர் சினிமாவிற்கு வந்து பாருங்கள். இன்னொரு வகையான கற்றலை உணர்வீர்கள். இந்த படங்கள் எல்லாம் பெரும் ஆய்வுக்குப் பிறகு, எந்தெந்த வகையில் சினிமா எடுக்க இளம் கலைஞர்களுக்கு உதவும் என்கிற அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறது.

இத்தகைய தொடர் திரையிடலுக்கு ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் குழுவாக அமையும்போது அதனைப் பார்க்கும் விதம், எப்படி உதவுகிறது, எப்படி இதிலிருந்து சினிமாவை கற்றுக்கொள்ளலாம் போன்றவை குறித்து தமிழ் ஸ்டுடியோ அருண் மோ வகுப்பு எடுப்பார். ஆனால் குறிப்பிட்ட பார்வையாளர் குழு அமையும் வரை பார்வையாளர்கள் படத்தைப் பார்த்துவிட்டுச் செல்லலாம். பியூர் சினிமாவிற்கு இத்தகைய திரையிடலுக்கு வரும் நண்பர்கள், நான் இதில் பார்வையாளர் குழுவில் இணைய விரும்புகிறேன் என்று உங்கள் பெயரைப் பதிவு செய்துக்கொள்ளுங்கள். ஆனால் தொடர்ந்து நீங்கள் எல்லா திரையிடலுக்கும் இப்படி பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து வரும் வெகு சில குறிப்பிட்ட பார்வையாளர்களுடன் அடுத்தடுத்த வகுப்புகள் நடக்கும். இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. முழுக்க முழுக்க உதவி தொழில்நுட்ப கலைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் இதனை முன்னெடுக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சினிமா மூலம் சினிமாவை கற்கலாம் என்கிற இந்த தொடர் திரையிடல் நிகழ்வில் இந்த வாரம் முழுக்க அனிமேஷன் படங்கள் திரையிடப்படுகிறது. இதில் 98 சதவீதம் மனிதர்கள் இருக்கமாட்டார்கள், முழுக்க இயற்கை, விலங்குகள், பறவைகள், சிறு விலங்கினங்கள் என மனிதர்கள் இல்லாமலேயே மனிதர்களுக்கு எப்படிக் கதை சொல்ல முடியும், எப்படி பார்வையாளனைக் கட்டுக்குள் வைப்பது என்பதை இத்தகைய படங்கள் உணர்த்தும். மொத்த படங்களையும் பாருங்கள். பார்வையாளர் குழு கொஞ்சம் கொஞ்சமாகக் கூடட்டும். அதுவரை தொடர்ந்து வந்து படங்களைப் பாருங்கள்.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42

Leave Comments

Comments (0)