மன்னார் மனித புதைகுழியில் தொடர்ந்து மீட்கப்படும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்!

/files/detail1.png

மன்னார் மனித புதைகுழியில் தொடர்ந்து மீட்கப்படும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்!

  • 0
  • 0

 

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 300 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 26 குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்கும்.

இந்நிலையில் 297வது நாளாக நடந்து வரும் அகழ்வுப் பணியில் தற்போது மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது என அங்கு பணியில் இருக்கும் சட்டவைத்திய அதிகாரி டி.எம்.ஏ ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதை குழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கை நாளை  வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

மன்னார் மனித புதை குழி அமைந்துள்ள பகுதி, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் நடைபெற்ற போர் காலத்தில் அரச படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)