சமையலர் பாப்பாள் மீதான சாதிய வன்கொடுமை: அரசு எந்த நீதியும் வழங்கவில்லை

/files/detail1.png

சமையலர் பாப்பாள் மீதான சாதிய வன்கொடுமை: அரசு எந்த நீதியும் வழங்கவில்லை

  • 0
  • 0

 

சமையலர் பாப்பாள் மீதான சாதிய வன்கொடுமை நடந்து ஓராண்டாகியும், அரசு எவ்விதமான நீதியும் வழங்காததற்குக் கண்டனம் தெரிவிப்பதாகத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறியுள்ளது.

இதுகுறித்து அவ்வியக்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "கடந்த 17.7.2018 அன்று அவினாசி ஒன்றியம், குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட திருமலைக் கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராக பணியமர்த்தப்பட்ட பாப்பாள் மீது, உள்ளூரைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகள் சிலர், அரசு அலுவலர்களை நிர்ப்பந்தப்படுத்தி, தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் போராட்டத்தால் 
அவர்கள் மீது, பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டத்தின்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் ஓராண்டுக் காலத்தை காவல்துறை எடுத்துக் கொண்டது.

காவல் துணைக் கண்காணிப்பாளர் பரமசாமி இவ்வழக்கின் விசாரணை அலுவலராக இருந்தால், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என ஏற்கனவே கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தியும் அக்கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது ஓராண்டுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, இந்த வழக்கில் மட்டுமல்ல, பல்வேறு வழக்குகளிலும் இதே நிலைதான்.

எனவே, தமிழக அரசின் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினுடைய இத்தகைய போக்கைக் கண்டித்து, வருகிற 19.7.19 (வெள்ளி) அன்று மாலை 5 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave Comments

Comments (0)