சாதியப்படுகொலை! தடை செய்யப்பட வேண்டிய கட்சி!

/files/A1-Recovered-2021-04-08-20:58:00.jpg

சாதியப்படுகொலை! தடை செய்யப்பட வேண்டிய கட்சி!

  • 19
  • 0

தவ.செல்வமணி


ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது எல்லா தேர்தலிலும் நடக்கும் முறைகேடுகள் போல சில பல பிரச்சனைகள் ஊடகங்களில் வெளியாகின !


எல்லா பிரச்னைகளையும் ஊடகம் தான் வெளிக்காட்டுகின்றன,மறைந்துள்ள பல மர்மங்களையே வெளிக்கொண்டு வரும் ஊடகம் பட்டியல் சமூக பிரச்சனைகள் என்றால் மட்டும் மறைந்தே விடுகிறது.


இன்று புதிய தலைமுறையில் வெளியான ஒரு செய்தி அரக்கோணம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ! இருவர் படுகொலை !



அது என்ன இரு பிரிவினர்? 


அரக்கோணம் சட்ட மன்ற தொகுதியில் சோகனூர் கிராமத்தில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு  தேர்தல் களப் பணியாற்றினார்கள் என்று, சூர்யா, அர்ஜுன்  ஆகிய இரண்டு தலித் இளைஞர்களை பாமகவைச் சார்ந்த  வன்னிய சாதி வெறியர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்கள்.


திருமாவளவனுக்கு வாக்கு கேட்பீர்களா ? பானை சின்னத்திற்கு ஓட்டு போட்டீர்களா ! என்று கேட்டு கேட்டு பலரை தாக்கியுள்ளனர் பாமக கட்சியை சேர்ந்த குணடர்கள்.





இதை ஊடகங்கள் பெருமளவு வெளிப்படுத்தியதா! என்றால் இல்லை ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் கண்டித்தார்களா! என்றால் இல்லை தலித் கட்சிகளும் பட்டியல் சமூக மக்களும் முற்போக்காளர்களும்  மட்டுமே குரல் எழுப்பி வருகிறார்கள்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் இந்த பாடுகொலையை எதிர்த்து ஏப்ரல் 10 தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்த அறைகூவல் விடுத்திருக்கிறார்.


இந்த தேர்தலில் முற்போக்கு சக்திகள் முன் வைத்த முழக்கமே மதவாதத்தை,சனாதனத்தை ஒழிக்க ஒன்றுகூடுங்கள் என்று தான் !


மதத்தை விட சாதி வலிமையானது கொடூரமானது என்பதை திராவிட மார்க்சிய முற்போக்கு சிந்தனையார்கள் உணர்ந்து கொள்ளாமல் இருந்தது ஏன் !



RSS யை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நாம் PMK வை தடை செய்ய வேண்டும் என்று கூற மறுப்பது ஏன்! அதற்க்கு காரணமும் சாதிய வன்மம் தான் பெரியார் மண் என்று மார்தட்டி நாம் தமிழகத்தை கூறினாலும் தமிழத்தில் மத வெறி ஒழிந்துள்ளதே தவிர,சாதியின் சீற்றத்துக்கு குறைவில்லை.


தற்போது மட்டுமல்ல எப்போதெல்லாம் பாமக பின்னடைவை சந்திக்கும் சூழலில் உள்ளதோ ! அப்போதெல்லாம் வன்னியர்களை தூண்டி கலவரம் செய்து பட்டியல் சமூக மக்களை கொலை செய்து வருகிறது.


கடந்த பாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானையை உடைத்து,தகாத வார்த்தைகளில் பேசி பட்டியல் சமூக மக்களின் வீடுகளை சூறையாடினர் பாமகவினர் பள்ளி மாணவர்களின் கைகளில் கட்டைகளை கொடுத்து சாதிய நஞ்சை விதைத்தனர்.



இந்த தேர்தலிலேயே திருப்போரூர் சட்ட மன்றத் தொகுதியில் பெருமாள் ஏரி கிராமத்தில் பானை சின்னத்திற்கு ஓட்டுக் கேட்டு துண்டுப்பிரசுரம் கொடுத்த எஸ்.கதிரவன் அவர்களைச் சாதிப் பெயர் சொல்லி, "நீங்கள் எல்லாம் எங்கள் பகுதியில் வந்து பானைக்கு ஓட்டுக் கேட்கிறீர்களா?" என்று கூறி சாதி வெறியர்கள் கொடிய ஆயுதங்களால் கொலை வெறியுடன் தாக்கி உள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் . அவர்கள் சென்ற வாகனத்தையும்  அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.


இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


1991 ஆம் ஆண்டு தேர்தலில் பாமக சாதி வெறியர்களால் பட்டியல் சமூக மக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.


தற்போது 2021 யில் அரக்கோணத்தில் பாமக சாதி வெறியர்களால் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்,மூவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அமைதி பூங்காவாக இருக்கும் தமிழத்தில் தனது கட்சியை வளர்ப்பதற்காக,தனது சுயலபாதுகாக பாமக நிறுவரின் தூண்டுதலின் பேரில் சேரிகளும் ,காலணிகளும் கொளுத்தப்பட்டன ,குடிசைகள் எரிக்கப்பட்டன,ஓட்டு வீடுகளை உடைத்தனர்,உடமைகளை பறித்தனர் எப்படி பல கலவரங்களுக்கு,கொலைகளுக்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.


எப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு ரத்த யாத்திரையோ !

அப்படி தான் பாமகவிற்கு சித்திரை பவுர்ணமி நிகழ்ச்சி !


பாமக சாதி வெறியர்களால் கொலை செய்யப்பட ,அர்ஜூன் 4 மாதக்குழந்தைக்கு தந்தை,சூரியா திருமணமாகி 15 நாட்கள் ஆனவர். 


பாமக நிறுவனர்  ராமதாசின் குடும்பம் பல தலைமுறைக்கு சொத்துக்களைக் குவிப்பதற்காக இரண்டு தலைமுறை வன்னியர்களை கூலிப்படையாக இயக்கி வருகிறார்,வன்னிய மக்களின் மூளை சலவை செய்து சாதிய நஞ்சை விதைத்து தங்களின் சுயலாப அரசியலுக்கு அடியாட்களாகவே பயன்படுத்துகிறார்.




கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களின் ஓட்டு அரசியலுக்காக பாமகவின் அராஜகத்தை அக்கிரமங்களை பெரிதும் கண்டிக்காமல் கள்ள மவுனம் காத்தனர்.


இன்று மாற்றத்தை விதைக்க வந்திருக்கிறோம் என்று கூறும் சீமானோ ! கமலஹாசனோ யாரும் பாமக வின் சாதிய அநீதிகளை கண்டிப்பதில்லை! 

சாதிய ஓட்டுகளை எதிர்பார்த்து வாய் மூடி கிடப்பார்கள்.


இன்னும் எத்தனை கொலைகளை,கலவரங்களை,வன்முறைகளை நடத்திடுவார்கள் இந்த சாதி வெறி பாமகவினர் இன்னும் எத்தனை கண்டனங்களை நாமும் தெரிவிக்க போகிறோம் !


அர்ஜுன் ,சூர்யா என்கிற இருவரையும் கொலை செய்த பாமகவினரை கைது செய்து ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

இந்த இருவரின் குடும்பத்திற்கும் அரசாங்கம் நிதியுதவி அளித்திட வேண்டும்.


மனித சமூகத்துக்கு கேடான பாட்டாளி மக்கள் கட்சியை, சாதிய பயங்கரத்தை பரப்பும் அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட வேண்டும்.

Leave Comments

Comments (0)