CAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி

CAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி

  • 39
  • 3

இலங்கையில் அந்த அரசாங்கத்தை வழி நடத்துகிற புத்த பிட்சுகள் எவ்வளவு கொடூரமானவர்களோ அவ்வளவு கொடுரமாணவர்கள் ஆர்எஸ்எஸ் குருமார்கள் என்று வழக்கறிஞர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நேற்று முன் தினம் (டிசம்பர் 26) சேப்பாக்கத்தில் இசைமுழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பேராசிரியர் சுந்தரவள்ளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திமுக எம்.பி. கனிமொழி, திரைப்பட இயக்குனர் ப. ரஞ்சித், வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அருள்மொழி, ”அகதிகளை ஒழுங்குபடுத்தக் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள் என்றால் ’அகதிகள்’ சட்டத்தைக் கொண்டுவராமல் ’குடியுரிமை சட்டத்தைத்’ திருத்துவார்கள். எந்தெந்த நாடுகளிலிருந்து அகதிகள் வரலாம், எந்தெந்த நாடுகளிலிருந்து அகதிகள் வரக்கூடாது என்பதுதானே உங்களின் பிரச்னை. அப்படியென்றால் அகதிகளுக்கென்று ஒரு சட்டம் போடவேண்டும் அல்லவா. அதைவிட்டுவிட்டு இருக்கிற மக்களுக்குக் குடியுரிமை ஆவணம் தயாரிக்கிறோம், தேசிய ஆவண குடிமக்களை உருவாக்குகிறோம் என்று சொல்லி ஆவணம் கொண்டுவாருங்கள் என்கிறார்கள். நம்மில் எத்தனை பேருக்குப் பிறப்பு சான்றிதழ் இருக்கிறது என்று தெரியவில்லை. 
இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது. நாளை நம்முடைய பெற்றோருக்குப் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா? என்று கேட்பார்கள். இல்லை என்பவர்கள் யாராக இருந்தாலும் தடுப்பு முகாமிற்குச் செல்லவேண்டிய நிலை வரும். அப்போது எந்த குடும்பமும் தெருவுக்கு வரும். எல்லாருடைய குழந்தையும் தட்டேந்தி நிற்கும். மாற்றுவுடை இல்லாத அகதி முகாமிற்குச் சொந்த நாட்டிலிருந்து போகக்கூடியவர்களாக யாரை வேண்டுமானாலும் மாற்றக்கூடிய அதிகாரத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இதுதான் அவர்களின் நீண்ட நாள் திட்டம்.
இன்னும் இரண்டு வருடத்திற்குள் அரசியலமைப்பு சட்டம் இருக்குமா? அடுத்த தேர்தல் நடக்குமா? நாம ஓட்டுப் போடுவோமா? என்பதே கேள்வி. இலங்கையில் அந்த அரசாங்கத்தை வழி நடத்துகிற புத்த பிட்சுகள் எவ்வளவு கொடூரமானவர்களோ அவ்வளவு கொடூரமானவர்கள் ஆர்எஸ்எஸ் குருமார்கள்” என்று தெரிவித்தார்.

Leave Comments

Comments (3)

  1. /files/default-usr.png

    Sivaranjani - May 28, 2020

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. In in pharetra ipsum. Curabitur vitae dapibus leo

  2. /files/default-usr.png

    Ranjani - May 28, 2020

    Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. In in pharetra ipsum. Curabitur vitae dapibus leo

  3. /files/default-usr.png

    Nixson - June 12, 2020

    Nice