CAA:இதுவரை 20க்கும் மேற்பட்டோர் படுகொலை

/files/detail1.png

CAA:இதுவரை 20க்கும் மேற்பட்டோர் படுகொலை

  • 0
  • 0

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 20 பேர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்திருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ”ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கும்,  ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையைச் செலுத்திவருகின்றனர். அசாம் போன்ற மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை 20க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கொலை செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
 

Leave Comments

Comments (0)