CAA: போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மன் மாணவர் ஐஐடி-யிலிருந்து வெளியேற்றம்

/files/detail1.png

CAA: போராட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மன் மாணவர் ஐஐடி-யிலிருந்து வெளியேற்றம்

  • 0
  • 0

 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவர் சென்னை ஐஐடி-யிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 09ஆம் தேதி இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்போடு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம், ”ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்னை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர்,  பார்சி, ஜெயின்ஸ், மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கும்,  ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தாது” என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் கடந்த 19ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் சென்னை ஐஐடி-யில் முதுகலை இயற்பியல் பிரிவில் படித்துவந்துள்ள ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்பவர் ’WE HAVE BEEN THERE’ (1933-1945) என்ற பதாகையைக் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதற்காக அவர் இந்தியாவில் தங்கிப் பயில்வதற்கான அனுமதியை இந்தியக் குடியுரிமைத் துறை ரத்து செய்ததுள்ளது. இதனை தொடர்ந்து ஜேக்கப் லிண்டென்ந்தால் சென்னை ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Leave Comments

Comments (0)