நீராவிப்பிட்டி பிள்ளையார் கோவிலில் புத்தர் கோவில்

/files/detail1.png

நீராவிப்பிட்டி பிள்ளையார் கோவிலில் புத்தர் கோவில்

  • 0
  • 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் அமைந்துள்ள நீராவிப்பிட்டி பி்ள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தற்போது இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் வேகமாக புத்தர் கோவில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள சைவ கோவில்கள் உடைத்து அழிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் கோவில் கட்டப்பட்டு வருகின்றது.

இலங்கை அரசு தமிழின அழிப்பை போரின் மூலம் நடத்தி முடித்த பின், இப்போது சத்தமின்றி இனத்தின் இருப்பை இல்லாதொழித்துக்கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் தினம் சைவ கோவில்கள் இனந்தெரியாத நபர்களினால் இடித்து அழிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவங்கள் குறித்து பல முறைப்பாடுகளை காவல் நிலையங்களில் பதிவு செய்து வருகின்ற போதும் சைவ கோவில்கள் அழிக்கப்பட்டு புத்தர் கோவில்கள் நிறுவப்படுவது நிறுத்தப்பட்டபாடில்லை.

இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் இலங்கையில் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும்.

இந்நிலையில், முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இது குறித்து தமிழ் மக்களினால் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இன்று புத்தர் கோவில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)