இலங்கைக்கு பணிந்த பிரித்தானிய நீதிமன்றம்- தமிழர்களுக்கு ஏமாற்றம்

/files/detail1.png

இலங்கைக்கு பணிந்த பிரித்தானிய நீதிமன்றம்- தமிழர்களுக்கு ஏமாற்றம்

  • 0
  • 0

 

இலங்கையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைதுசெய்ய விடுக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெறக்கூடாதென புலம்பெயர் தமிழர்கள் குறித்த நீதிமன்றத்தின் முன் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இது புலம்பெயர்  ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ம்ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட, இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைது செய்ய வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், இலங்கைவெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது, விசாரணை ஏதுமின்றி, பிடியாணையை திரும்பப் பெற நீதிவான் கட்டளையிட்டுள்ளார். பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் தலையீட்டை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)