பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியாது- இலங்கை திட்டவட்டம்

/files/detail1.png

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியாது- இலங்கை திட்டவட்டம்

  • 0
  • 0

2018ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றபோது, உயர்ஸ்தானிகராலயத்திற்கு வௌியில் புலம்பெயர் தமிழ் மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இதன்போது புலம் பெயர் தமிழர்களை  அச்சுறுத்தும் வகையில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை செய்ததாக  குற்றம்சுமத்தப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து பிரியேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார். பின்னர்   மீண்டும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அவர் பதவியில் அமர்த்தப்பட்டார். இது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலைமையின் கீழ், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டிற்கு எதிராக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தினால் விசாரணைகள் நடாத்தப்பட்டு வந்திருந்தது. இவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம்  உத்தரவு விட்டது.

alt text

இது தொடர்பில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம்  தெரிவித்த கருத்தில், வியன்னா (Vienna) மாநாட்டு உடன்படிக்கையின் பிரகாரம், கடமைகளுக்கான பிரித்தானியாவிற்கு வருகைத் தந்த ராஜதந்திர அதிகாரி ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என கூறியுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் தற்போது தொடர்ந்து வசிக்கவில்லை என்பதனையும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு லண்டனில் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு தொடர்பில் தாம் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

2009 இறுதிப்போரில் ஒரு இலட்சத்துக்கும் மேலான ஈழத்தமிழர்களை இலங்கை அரச படைகள் படுகொலை செய்தது. இந்த காலப்பகுதியில் இராணுவத்தின் உயர் நிலைப்பதவியில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)