8 வழிச்சாலை: 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக-அதிமுக தோல்வி - எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்

/files/detail1.png

8 வழிச்சாலை: 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக-அதிமுக தோல்வி - எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்

  • 0
  • 0

தமிழகத்தில், விவசாயத்தை அழிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொன்னதால் பாஜக-அதிமுக கூட்டணி எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் ஐந்து மாவட்டங்கள் உட்படத் தமிழகம் முழுவதும் படுதோல்வி அடைந்திருக்கிறது என்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

”எட்டு வழிச்சாலை திட்டம் உட்பட இன்னும் பல நாசக்கார திட்டங்களைக் கொண்டு வருவோம் என்றும் பாஜக தொடர்ச்சியாக அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது-கொண்டிருக்கிறது. எடப்பாடியாரும் பாஜக தலைவர்களும் எட்டு வழிச்சாலையை கொண்டு வந்தே தீருவோம் என்று தொடர் அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதற்கு அவர்களின் கூட்டணிக் கட்சியினர் வாய்மூடி மௌனம் காத்தார்கள். இந்நிலையில் பாஜக-அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் ஒரு தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் முக்கியமாக எட்டு வழிச்சாலையை கொண்டு வருவோம் என்று சொன்னதால் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற நாடாளுமன்றத்தொகுதிகளில் பல்லாயிரக்கணக்கான-ஏன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

எட்டு வழிச்சாலைக்கு எதிரான இந்த அறப்போராட்டத்தில் எங்களோடு நின்ற இந்த தொகுதி மக்களுக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நாங்கள் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு வழிச்சாலையைக் கொண்டு வருவோம் என்று கனவில் நினைத்தால் கூட அவர்களையும் மக்கள் தோற்கடிப்பார்கள் என்றும் அதற்கான வேலைகளை எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் செய்யும் என்று கூறிக்கொள்கிறோம்.

எட்டு வழிச்சாலை எதிர்ப்போம்; தமிழகம் காப்போம்” என்று அந்த இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)