பகவத்கீதை மனித நேயத்திற்கு எதிரானது- திருமுருகன் காந்தி

/files/detail1.png

பகவத்கீதை மனித நேயத்திற்கு எதிரானது- திருமுருகன் காந்தி

  • 0
  • 0

 

அண்ணாவின் பெயரில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்தில் அண்ணா எதிர்த்த தத்துவ மரபைக் கொண்டுவந்து திணிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பில் பகவத்கீதை பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சிலின் (AICTE) உத்தரவின் பேரில் பகவத்கீதை விருப்பப் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் 3-வது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.இதற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.  

அவ்வகையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “மாணவர்களின் வாழ்க்கைக்கும், சமூகத்திற்கும் பயன்பட கூடியதைத்தான் விருப்ப பாடமாக வைக்கவேண்டும்.  விருப்பமாக இருக்கிறது என்பதற்காக மது போன்ற போதைப் பொருட்களையோ, நஞ்சையோ வைத்துவிடக் கூடாது. அதுபோல பகவத்கீதை என்பது மனித நேயத்திற்கு எதிரானது. அண்ணாவின் பெயரில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்தில் அண்ணா எதிர்த்த தத்துவ மரபைக் கொண்டுவந்து திணிப்பது என்பது திட்டமிட்டு சூழ்ச்சியாக இந்த ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய அறிவியல் மற்றும் பொறியில் மனநிலையைச் சிதைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)