தோழர் அசோக்கைப் படுகொலை செய்த கொலையாளிகளைக் கைது செய்- கே.பாலகிருஷ்ணன்

/files/detail1.png

தோழர் அசோக்கைப் படுகொலை செய்த கொலையாளிகளைக் கைது செய்- கே.பாலகிருஷ்ணன்

  • 0
  • 0

 

தோழர் அசோக்கைப் படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் எஸ்.சி., / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நெல்லை தச்ச நல்லூர் அருகே உள்ளது கரையிருப்பு கிராமம். இந்த கிராமத்தில் வாழும் பள்ளர் சமூக மக்கள் தங்களின் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் மறவர் சாதியைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் குடியிருப்பு வழியாக மட்டுமே செல்ல முடியும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மறவர் சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெரு வழியாக விவசாயப் பணிக்காகச் செல்லும் பள்ளர் சமுக மக்களைச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசுவது, இந்த வழியாகச் செல்லக்கூடாது என்று மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களைச் செய்துவந்துள்ளனர். இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை தாலுகா செயலாளர் தோழர் அசோக் தலைமையிலான தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்த்துக் கேட்டுள்ளனர். 

எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டீர்களா? என்றும், இதற்குக் காரணம் அசோக்தான் எனக் கருதி, அசோக் தனது தயாருடன் வயலுக்குச் சென்று இரு சக்கர வாகனத்தில்  திரும்பிக் கொண்டிருக்கும்போது  வழி மறித்து மறவர் சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அசோக் உயிரிழந்துள்ளார். 

இந்த தாக்குதல் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வழக்கம் போல காவல்துறை இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. குற்றவாளிகள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

alt text

"தோழர் அசோக்கை படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, கொலைக்குற்றப் பிரிவுகளுடன் - எஸ்.சி., / எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை இணைப்பது உள்ளிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். முன்னரே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தோழர் அசோக் படுகொலையை கண்டித்தும், சாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திட வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

ஒடுக்குமுறைகளை எதிர்த்து சமத்துவத்திற்காக குரல்கொடுக்கும் ஜனநாயக சக்திகள், தனிநபர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பினரையும் இந்த படுகொலைக்கு எதிராக கண்டனக் குரலெழுப்ப முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

Leave Comments

Comments (0)